»   »  அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இதை..: ஸ்ருதி

அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இதை..: ஸ்ருதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்பொழுது வேண்டுமானாலும் பாடலாம், இசையமைக்கலாம் ஆனால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து புலி படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பாட்டும் பாடி வருகிறார். இந்நிலையில் நடிப்பு பற்றி ஸ்ருதி கூறுகையில்,

ஹீரோயின்

ஹீரோயின்

ஒரு நடிகைக்கு அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோயினுக்கு மவுசு சிறிது காலம் தான். 7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக தாக்குப்பிடிக்க முடியாது.

காற்றுள்ளபோதே

காற்றுள்ளபோதே

ஹீரோயினின் மவுசு குறைந்த காலமே என்பதால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள விரும்புகிறேன்.

பாட்டு, இசை

பாட்டு, இசை

பாட்டு பாடுவதையும், இசையமப்பதையும் நான் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நடிப்பு அப்படி இல்லை என்றார் ஸ்ருதி.

திரைக்கதை

திரைக்கதை

ஸ்ருதி பாட்டு பாடுவதுடன் இசையமைப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இது தவிர அவர் திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் திரைக்கதை எழுத உதவும் அப்ளிகேஷனை அப்பா கமல் ஸ்ருதிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shruti Haasan told that since a leading lady's life is for a short period, she wants to concentrate in acting rather than singing and composing.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil