»   »  பெரிய இடத்து வாரிசு நடிகரை காதலிக்கிறேனா?: ஸ்ருதி விளக்கம்

பெரிய இடத்து வாரிசு நடிகரை காதலிக்கிறேனா?: ஸ்ருதி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்பிர் கபூரை தான் காதலிக்கவில்லை என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தனது காதலி கத்ரீனா கைஃபை பிரிந்துவிட்டார். இந்நிலையில் ரன்பிரும், நடிகை ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது.

விளம்பரப் படம் ஒன்றில் சேர்ந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ரன்பிரும், ஸ்ருதியும் டின்னருக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

ரன்பிர்

ரன்பிர்

காதல் செய்தி பற்றி ரன்பிர் கபூரும் கண்டுகொள்ளவில்லை, ஸ்ருதியும் கண்டுகொள்ளவில்லை. சொல்லப் போனால் ரன்பிர் கபூர் இன்னும் கத்ரீனாவின் நினைப்பில் தான் உள்ளார்.

ஸ்ருதி

ஸ்ருதி

நான் என் வேலையில் பிசியாக உள்ளேன். காதல் வதந்தி பற்றி எல்லாம் பதில் சொல்ல எதுவும் இல்லை. வதந்திகள் என்னை பாதிப்பது இல்லை என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பிரேமம்

பிரேமம்

பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலர் டீச்சராக நடித்த ஸ்ருதியை ரசிகர்கள் கலாய்த்த நிலையில் படம் ஹிட்டாகியுள்ளது. அதனால் அவர் அந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

ஏ தில் ஹை முஷ்கில்

ஏ தில் ஹை முஷ்கில்

அடுத்தடுத்து தன்னுடைய படங்கள் ஊத்திக் கொண்ட வருத்தத்தில் இருக்கும் ரன்பிர் கபூர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை ரன்பிர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

English summary
Shruti Haasan has rubbished the rumour about her alleged love with actor Ranbir Kapoor. She said she is busy with her work right now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil