»   »  ஸ்ருதி ஒன்னும் சங்கமித்ராவில் இருந்து தானா விலகவில்லை: தயாரிப்பு தரப்பு புது குண்டு

ஸ்ருதி ஒன்னும் சங்கமித்ராவில் இருந்து தானா விலகவில்லை: தயாரிப்பு தரப்பு புது குண்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் தானாக வெளியேறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா சார்பில் கலந்து கொண்ட பிறகு படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

கதையை முழுமையாக தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக கூறுகிறார்கள்.

சங்கமித்ரா

சங்கமித்ரா

ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ ஹேமா ருக்மினி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் சங்கமித்ரா படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்று தெரிவித்தார். அதாவது அவர் விலகவில்லை, வெளியேற்றப்பட்டார் என்கிறார்.

விளக்கம்

விளக்கம்

சங்கமித்ராவில் இருந்து நான் தான் விலகிவிட்டேன் என்றார் ஸ்ருதி. தற்போது தயாரிப்பு தரப்பில் வெளியேற்றிவிட்டோம் என்கிறார்கள். இதை ஸ்ருதி தான் விளக்க வேண்டும்.

நடிகை

நடிகை

ஸ்ருதிக்கு பதில் நல்ல நடிகையை சங்கமித்ராவாக தேர்வு செய்துவிட்டார்களாம். அது யார் என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம்.

English summary
Sri Thenandal studios CEO Hema Rukmini said that Shruti Haasan did not opt out of Sangamithra to be directed by Sundar C.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil