»   »  வழக்கறிஞரைத் தொடர்ந்து 'பத்திரிகையாளராக' மாறிய ஸ்ருதிஹாசன்!

வழக்கறிஞரைத் தொடர்ந்து 'பத்திரிகையாளராக' மாறிய ஸ்ருதிஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எஸ் 3' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சிங்கம்', 'சிங்கம் 2' படங்களைத் தொடர்ந்து 'எஸ் 3' படத்தில் சூர்யா மீண்டும் துரை சிங்கமாக களமிறங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Shruti Haasan Helps Surya in S3

இதில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், கிரிஷ், சூரி, ரோபோ சங்கர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஒரு பெரிய வழக்கில் மாட்டிக்கொள்ளும் சூர்யாவுக்கு ஸ்ருதி உதவி செய்கிறார்.

ஸ்ருதியுடன் உதவியுடன் சூர்யா வில்லன்கள் சாம்ராஜ்யத்தை அழிப்பது தான் 'எஸ் 3' படத்தின் கதை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதி வரை 'எஸ் 3' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ஸ்ருதி தனது தொடர்பான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்ததாக 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

'வேதாளம்' படத்தில் ஸ்ருதி வழக்கறிஞராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Shruti Haasan Plays a Journalist in S3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil