»   »  புடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஸ்ருதி 'சங்கமித்ரா' ஹாஸன்

புடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஸ்ருதி 'சங்கமித்ரா' ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்யா, ஜெயம் ரவியை வைத்து சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

சுந்தர் சி சங்கமித்ரா என்ற பெயரில் பிரமாண்ட படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க விஜய், சூர்யா உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் தயங்கினார்கள்.

இந்நிலையில் தான் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.

பிரமாண்ட குழு

பிரமாண்ட குழு

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறர். பாகுபலி படத்தில் பணியாற்றும் கமலக்கண்ணன் விஷுவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசராகவும், ஒளிப்பதிவாளராக பாஜிராவ் மஸ்தானி புகழ் சூதீப் சாட்டர்ஜியும், சவுண்ட் டிசைனராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். படத்தில் ஸ்ருதியின் பெயர் தான் சங்கமித்ராவாம். இந்த படத்திற்காக ஸ்ருதி கொத்தாக டேட்ஸ் கொடுத்துள்ளாராம்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஸ்ருதி வரும் மே மாதம் முதல் சங்கமித்ரா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். மேலும் ஜூன் மாதம் முதல் சங்கமித்ராவுடன் சேர்த்து தனது தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்க உள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

ஸ்ருதி டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் பிசியாக உள்ளார். சிங்கம் 3 படத்தில் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றிய நிலையில் பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

English summary
Shruti Haasan is playing the central character of Sangamithra being directed by Sundar C of the same name. The mega budget movie has Arya and Jaya Ravi as male leads.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil