»   »  தங்கச்சி அக்ஷராவை பொத்திப் பொத்தி வைக்கும் ஸ்ருதி ஹாஸன்

தங்கச்சி அக்ஷராவை பொத்திப் பொத்தி வைக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது தங்கை அக்ஷராவை பத்திரமாக பார்த்துக் கொள்கிறாராம்.

ஸ்ருதி ஹாஸனும் அவரது தங்கை அக்ஷராவும் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ருதி தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். அக்ஷரா தனது தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார். இயக்குனராகும் ஆசையுடன் இருந்த அக்ஷரா பால்கியின் ஷமிதாப் படம் மூலம் நடிகை ஆனார்.

இந்நிலையில் தங்கை பற்றி ஸ்ருதி கூறுகையில்,

அக்ஷரா

அக்ஷரா

நான் எப்பொழுதுமே என் தங்கை அக்ஷராவுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன். அவரின் சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மேலும் பல சாதனைகள் செய்து எங்களை பெருமைப்படுத்துவதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

பாலிவுட்

பாலிவுட்

நான் பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்று ஒருபோதும் திட்டமிட்டது இல்லை. நான் இசைத் துறையில் இருக்கவே விரும்பினேன். அதிலும் குறிப்பாக எனக்கு இசையமைப்பது மிகவும் பிடிக்கும்.

பிசி

பிசி

தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளேன். அதனால் அந்த படங்களில் நடிக்கவே நேரம் சரியாக உள்ளது. அடுத்து ஆண்டு வாக்கில் இசையமைக்கும் பணி பற்றி பார்க்க வேண்டும் என்றார் ஸ்ருதி.

புலி

புலி

ஸ்ருதி விஜய் ஜோடியாக நடித்துள்ள புலி படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

English summary
Actress Shruti Haasan says she's protective about her younger sister Akshara, who made inroads into Bollywood with 'Shamitabh'. "I'm very protective about Akshara and also very proud of her achievements. I can't wait to see her do more and make us all proud," said Shruti.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil