»   »  மும்பையை நனைத்த 'ஜில்' மழை.. டிவிட்டரில் 'சிலிர்த்த' ஸ்ருதி ஹாசன்!

மும்பையை நனைத்த 'ஜில்' மழை.. டிவிட்டரில் 'சிலிர்த்த' ஸ்ருதி ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ருதிஹாசன் எந்தக் காரணமுமில்லாமல் சந்தோஷத்தை உருவாக்குவதாக மழையைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் தனது தந்தையுடன் நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில் ஸ்ருதி தனது மும்பை வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

மும்பையில் இன்று கனமழை கொட்டித் தீர்த்தது.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் '' ஒரு அழகான காலைப் பொழுது, மழை, மும்பை வீடு ஆகியவற்றை நான் எப்போதும் விரும்புகிறேன்.

Shruti Haasan Love Mumbai rain

இவை எப்போதும் என்னை சந்தோஷமாக வைத்துள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார். மேலும் காலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசனின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 'சபாஷ் நாயுடு' மற்றும் 'எஸ் 3' ஆகிய படங்கள் ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

'சபாஷ் நாயுடு' படத்தில் முதன்முறையாக தந்தை கமலுடன், ஸ்ருதி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
''I Love Rain, Mumbai Home and Gorgeous Weather'' Shruti Haasan says Her Twitter Page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil