»   »  எனக்கும் தொழில் அதிபருக்கும் திருமணமா?: சொல்லவே இல்லை- கலாய்க்கும் ஸ்ருதி

எனக்கும் தொழில் அதிபருக்கும் திருமணமா?: சொல்லவே இல்லை- கலாய்க்கும் ஸ்ருதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்து கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் யாரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் எஸ்.3. படத்தில் நடிக்கிறார். மேலும் தனது தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பிரேமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணம்

29 வயதாகும் ஸ்ருதி ஹாஸன் அடுத்த ஆண்டு மும்பையை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபரை திருமணம் செய்ய உள்ளார். அசினை போன்று மற்றொரு ஹீரோயினும் தொழில் அதிபரை மணக்கிறார் என்று பிக் சினிமாஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

ஸ்ருதி

பிக் சினிமாஸ் தனது திருமணத்தை பற்றி போட்ட ட்வீட்டை பார்த்த ஸ்ருதிக்கு கோபம் அல்ல மாறாக சிரிப்பு வந்திருக்கிறது. இதையடுத்து அந்த ட்வீட்டை கிண்டல் செய்வது போன்று அப்புறம் சொல்லவே இல்லை என்பது போன்று பதிலுக்கு ட்வீட் போட்டுள்ளார்.

காதல்

காதல்

ஸ்ருதி முன்பு நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்தனர். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

பிசி

பிசி

சித்தார்த்தை பிரிந்த பிறகு ஸ்ருதி காதல் வயப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. அவர் படம், பாட்டு, டான்ஸ் என ரொம்பவே பிசியாக உள்ளார். இதற்கிடையே அவ்வப்போது தங்கை அக்ஷரா ஹாஸனுடன் ஊர் சுற்றுவார்.

English summary
Actress Shruti Haasan makes fun of those who talk about her so called wedding with a NRI businessman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil