என்னது ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு ஹார்மோன் பிரச்சனை இருக்கா? PCOS இருக்கு என அவரே சொல்லிட்டாரே!

சென்னை: நடிகர் கமல் மற்றும் நடிகை சரிகாவுக்கு மூத்த மகளாக பிறந்து இந்திய சினிமா நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சீரான மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை உள்ளதாக அவரே வீடியோ போட்டு சொல்லியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அப்பா கமலின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.

2009ம் ஆண்டு லக் எனும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தமிழில் 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார்.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

இந்தியில் அறிமுகமான ஸ்ருதிஹாசனுக்கு அங்கே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டோலிவுட்டில் ஸ்ருதிஹாசனின் படங்கள் ஹிட் அடித்த நிலையில், கோலிவுட்டிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வந்தாலும், ஸ்ருதிஹாசனால் நம்பர் ஒன் நடிகையாக வர முடியவில்லையே என்கிற வருத்தம் எப்போதுமே அவரை வாட்டி எடுத்து வருகிறது.

காதல் முறிவு

காதல் முறிவு

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா நடிகர்கள் சிலருடனே காதல் வலையில் விழுந்தார் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் கோர்சலேவுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், தனது அப்பா கமலிடம் அவரை அறிமுகப்படுத்திய புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், திருமணத்தில் முடியும் என எதிர்பார்த்த அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது ஸ்ருதிஹாசனை ரொம்பவே பாதித்தது. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்தே விலகினார்.

மீண்டும் காதல்

மீண்டும் காதல்

அந்த காதல் முறிந்த நிலையில், ஓவியக் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை ஸ்ருதிஹாசன் நடத்தி வருவதாக இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ருதிஹாசனே வெளியிட்ட நிலையில், மீண்டும் காதலில் விழுந்துள்ளார் ஸ்ருதிஹாசன், இருவருக்கும் எப்போது திருமணம் என கேள்விகள் கிளம்பின.

PCOS பிரச்சனை

PCOS பிரச்சனை

இந்நிலையில், கடந்த புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் வொர்க்கவுட் வீடியோ ஒன்றை பதிவிட்ட ஸ்ருதிஹாசன் தனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது என்றும் PCOS பாதிப்பு இருப்பதாகவும் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். உடல் அளவில் எனக்கு பாதிப்புகள் இருந்தாலும், உள்ளத்தால் ஹெல்தியாக இருக்கிறேன். என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவே இதுபோன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன் என தனக்கு இருக்கும் பாதிப்பு குறித்து ஓப்பனாக பேசி உள்ளார்.

PCOS என்றால் என்ன

PCOS என்றால் என்ன

PCOS - Polycystic Ovary Syndrom. இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகில் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால், ஏகப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு பலரும் மருத்துவர்களை நாடும் நிலை உருவாகி உள்ளது. PCOS மற்றும் PCOD பிரச்சனைகளால் பல பெண்கள் அவதிப்பட்டு வருவதை போலவே நடிகை ஸ்ருதிஹாசனும் அவதிப்பட்டு வருவதாக அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X