ஸ்கூல் யூனிபார்மில் ஸ்ருதிஹாசன்..அப்பவே அம்புட்டு அழகு!

சென்னை : நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அதில் செம ரொமான்டிக்கான பாடல் ஒன்று தயாராகிவருகிறது.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் வக்கீல் சாப் திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ இணைந்து தயாரித்து வருகின்றனர்.

செம ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வந்த ஸ்ருதிஹாசன் இப்போது பள்ளி சீருடையில் லிட்டில் ஏஞ்சல் போல அழகாய் அமர்ந்துகொண்டு பாடல் பாடிக் கொண்டிருக்கும் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

வதந்திகள் பரப்பப்பட்டு

வதந்திகள் பரப்பப்பட்டு

விஜய் சேதுபதி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இரண்டாம் முறையாக இணைந்திருக்கும் லாபம் திரைப்படம் அரசியலை ஆணித்தனமாக பேசும் படமாக தயாராகி வரும் நிலையில் திரைப்படம் வெளியாவதை பற்றிய சில வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் விஜய் சேதுபதி அதற்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஸ்ருதிஹாசனுடன் ஜோடி

ஸ்ருதிஹாசனுடன் ஜோடி

லாபம் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதற்கு பின்பே ஓடிடியில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வெளியிட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முறையாக ஸ்ருதிஹாசனுடன் ஜோடி போட்டுள்ளார்.

ரொமான்டிக்கான பாடல்

ரொமான்டிக்கான பாடல்

சிறுவயது முதலே பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன் பல திரைப்படங்களில் பாடல்களைப் படி இருக்கும் நிலையில் தெலுங்கில் இப்போது பவன் கல்யாணின் மிரட்டலான நடிப்பில் உருவாகிவரும் வக்கீல் சாப் திரைப்படத்தில் பவன் கல்யாணுடன் மீண்டும் ஜோடி போட்டுள்ள ஸ்ருதிஹாசனுக்கு இதில் செம ரொமான்டிக்கான பாடல் ஒன்று உருவாகி வருகிறது என்ற செய்தி சமீபத்தில் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

வக்கீல் சாப்

வக்கீல் சாப்

பவன் கல்யாண் மற்றும் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே "கபர் சிங்" திரைப்படத்தில் இணைந்திருக்கும் நிலையில், பிரபல இந்தி திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் "வக்கீல் சாப்" நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோரின் இணைத் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

அம்புட்டு அழகா இருக்கீங்க

அம்புட்டு அழகா இருக்கீங்க

இவ்வாறு அடிக்கடி அசத்தலான அப்டேட்டுகளை வெளியிட்டு தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் பரபரப்பாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அதே பரபரப்புடன் சோசியல் மீடியாக்களிலும் சமீபகாலமாக பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வந்த நிலையில் இப்பொழுது பள்ளி சீருடையில் மிகவும் குட்டி பாப்பாவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் பாடல் பாடிக் கொண்டிருக்கின்றனவாறு இருக்கும் அரிய போட்டோ ஒன்றை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருவதைத் தொடர்ந்து இந்த க்யூட் போட்டோ இப்போது வைரலாகி வர "அப்பவே அம்புட்டு அழகா இருக்கீங்க" என்ன பலரும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X