»   »  ஆபரேஷன் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு வந்த ஸ்ருதி ஹாஸன்

ஆபரேஷன் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு வந்த ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குடல் வால் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கையோடு நடிகை ஸ்ருதி ஹாஸன் நடிக்க சென்றுவிட்டார்.

ஹைதராபாத்தில் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் வால் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை

மும்பை

அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்ருதி ஹாஸன் மும்பைக்கு சென்றுவிட்டார். அங்கு அக்ஷய் குமாருடன் தான் நடிக்கும் கப்பார் படத்தின் ஷூட்டிங்கில் நேற்று கலந்து கொண்டார். கப்பார் படத்தின் ஷூட்டிங் நேற்று தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஸ்ருதியின் நிலைமை குறித்து அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்காக பிரார்த்தனை செய்த, வாழ்த்திய ரசிகர்களுக்கு ஸ்ருதி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

வலி

வலி

மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அப்பெண்டிக்ஸுக்கு பை பை, ஹலோ நியூ இயர். வலியை வெறுக்கிறேன் என்று ஸ்ருதி ட்வீட் செய்துள்ளார்.

என்ன உழைப்பு

என்ன உழைப்பு

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மறுநாளே ஸ்ருதி படப்பிடிப்பில் கலந்து கொண்டது பாலிவுட்டில் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

English summary
Actress Shruti Haasan, who recently underwent a surgery for appendicitis here, resumed work on wednesday. She shot for Akshay Kumar-starrer "Gabbar".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil