»   »  தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகள்... "100 கோடி" நாயகியான சுருதி ஹாசன்

தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகள்... "100 கோடி" நாயகியான சுருதி ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகை சுருதிஹாசன் தற்போது 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அக்சய் குமாருடன் இணைந்து நடித்த கப்பர் இஸ் பேக், ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்த வெல்கம் பேக் மற்றும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு 3 படங்களுமே 100 கோடி வசூலைக் குவித்திருக்கின்றன.

இதன் மூலம் ஒரே வருடத்தில் மூன்று 100 கோடிப் படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார் சுருதிஹாசன்.

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

இந்த வருடம் நடிகை சுருதிஹாசனுக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகை சுருதிஹாசன் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து ஹிட் நாயகி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

100 கோடிகளின் நாயகி

100 கோடிகளின் நாயகி

இந்த வருடத்தில் மட்டும் மூன்று 100 கோடிப்படங்களில் நடித்திருக்கிறார் சுருதி. அக்சய் குமாருடன் இணைந்து நடித்த கப்பர் இஸ் பேக், ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்த வெல்கம் பேக் மற்றும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு 3 படங்களுமே 100 கோடி வசூலைக் குவித்திருக்கின்றன.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

இதைத் தவிர தமிழில் விஜயுடன் புலி மற்றும் அஜீத்துடன் தல 56 படத்தில் நடித்து வருகிறார். விஜயின் புலி வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாகவிருக்கிறது. அஜீத்துடன் நடித்திருக்கும் தல 56 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

சிங்கம் 3 நாயகி

சிங்கம் 3 நாயகி

7 ம் அறிவு படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த சுருதி தற்போது சிங்கம் 3 படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவுடன் 2 வது முறையாக மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறார்.

English summary
Shruti Haasan has emerged as one of the most sought-after actresses in the film industry. Now she is Entered in 100 Crore Club.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil