»   »  ரசிகர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - ஸ்ருதிஹாசன்

ரசிகர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - ஸ்ருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஹாட் ஸ்டார் இணையதளம் தற்போதைய இணைய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் ஸ்டார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Shruti Haasan's New Collaboration To Benefit Tamil Audiences!

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தமிழ்நாட்டு விளம்பரத் தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதுகுறித்து அவர் ''ஹாட் ஸ்டாருடனான இந்த ஒப்பந்தம் குறித்து சந்தோஷமடைகிறேன்.

இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை விருப்பமான நேரத்தில் பார்த்து மகிழலாம்.

மற்ற நாடுகளின் ரசிகர்களைப் போல இந்திய ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவைகளைப் பார்க்க அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது எனக்குப் பெருமையாக உள்ளது. மேலும் ஹாட் ஸ்டார் மூலம் இனிமேல் என்னுடைய படங்கள் அதிகளவிலான ரசிகர்களை சென்றடையும் என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாட் ஸ்டார் நிறுவனர் மாதவன் '' ஸ்ருதிஹாசனை எங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்திருக்கிறோம்.இதன் மூலம் தமிழ்நாட்டில் ஹாட் ஸ்டார் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்'' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமலஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

English summary
Actress Shruti Haasan is now the brand ambassador of Hotstar, a leading online streaming channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil