அட இது கூட நல்லா இருக்கே...கமல் மகளின் பிறந்தநாள் ஸ்பெஷல் பிளான் இதுதான்

சென்னை : தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட ஸ்பெஷல் பிளான் ஒன்றை வைத்துள்ளார் ஸ்ருதிஹாசன். பிறந்த நாளை எப்படி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அவரே கூறி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்பாவை போலவே பொண்ணு என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Indian 2-வை முடிப்பாரா KamalHaasan? அதிர்ச்சியில் Director Shankar | Oneindia Tamil

நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ஆரம்பத்தில் பின்னணி மட்டுமே பாடி வந்தார். தனியாக இசை ஆல்பங்கள் பலவற்றையும் தானே இசையமைத்து, பாடி வெளியிட்டு வந்தார். இந்தியில் லக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ருதி. இந்தியில் அவர் நடித்த ஒரு சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் தாய்மொழியான தமிழ் பக்கம் வந்தார்.

தென்னிந்தியாவில் பிரபலம்

தென்னிந்தியாவில் பிரபலம்

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து ஏழாம் அறிவு, பூஜை, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானார். திடீரென படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் நடித்திருந்தார். படங்களில் நடிக்காவிட்டாலும் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். அடிக்கடி ரசிகர்களை லைவில் சந்தித்து பேசி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஒரு மாதமாக ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரு மாதமாக ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். தன்னை வாழ்த்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல ஸ்ருதியும் முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் லட்சக்கணக்கில் வாழ்த்து குவிந்து வருகிறது.

ஸ்ருதியின் பிறந்தநாள் பிளான்

ஸ்ருதியின் பிறந்தநாள் பிளான்

ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், இந்த ஆண்டு தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் லைவில் உரையாட முடிவு செய்துள்ளார். மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.

அட...இது கூட நல்லா இருக்கே

அட...இது கூட நல்லா இருக்கே

இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாக சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்த தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிக்க போகிறாராம். நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களை பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

இப்படி தான் கொண்டாடனும்

இப்படி தான் கொண்டாடனும்

இது பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில், நேரடி அமர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது, நாம் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும்.

நிறைய பேசனும்

நிறைய பேசனும்

இது குறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும், உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களை குறித்து அவர்களை சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X