»   »  'தல' புராணம் பாடுவோர் பட்டியலில் சேர்ந்த ஸ்ருதி ஹாஸன்

'தல' புராணம் பாடுவோர் பட்டியலில் சேர்ந்த ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல போல வருமா என்று அஜீத் புகழ்பாடுவோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன்.

தல அஜீத் நல்ல மனிதர், பொறுமையானவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் அன்பாக பழகுபவர் என்று ஏற்கனவே கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய கூட்டமே அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர் தனது கையால் சமைக்கும் பிரியாணியின் சுவைக்கு பல நடிகர், நடிகைகள் அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி

ஸ்ருதி

புலி படத்தில் விஜய்யுடன் நடித்து முடித்த கையோடு ஸ்ருதி ஹாஸன் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கும் 'தல 56' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அஜீத்

அஜீத்

அஜீத் ஒரு அருமையான மனிதர், சூப்பர்ஹீரோ என்று அவருடன் நடிக்கும் ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். தல புகழ் பாடும் நடிகைகள் பட்டியலில் ஸ்ருதியும் சேர்ந்துள்ளார்.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டதாகவும், அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ள மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நெகிழ்ந்து கூறியுள்ளார் நடிகை லக்ஷ்மி மேனன்.

த்ரிஷா

த்ரிஷா

எனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் கூறி வருகிறார் த்ரிஷா. த்ரிஷா மட்டும் அல்ல அஜீத்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் அவரை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Actress Shruti Haasan too gets impressed by Ajith. Shruti is the leading lady of Thala 56 being directed by Siruthai Siva.
Please Wait while comments are loading...