»   »  சீயான் சீயான், சீயான் சீயான்: சீயானுக்கு அடிபோடும் ஸ்ருதி ஹாஸன்

சீயான் சீயான், சீயான் சீயான்: சீயானுக்கு அடிபோடும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஸ்ருதி ஹாஸன்.

பாலிவுட், டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஸ்ருதி ஹாஸன். நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் தமிழ் படங்களில் நடிப்பேன் என்று கூறி வந்தார். இந்நிலையில் பாலிவுட், டோலிவுட்டுக்கு இணையாக கோலிவுட் படங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஸ்ருதி.

அதனால் அம்மணிக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

புலி

புலி

ஸ்ருதி இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து புலி படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அவர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாட்டும் பாடியுள்ளார். படத்தில் ஹன்சிகா இருந்தாலும் ஸ்ருதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்று கூறப்படுகிறது.

அஜீத்

அஜீத்

விஜய் படத்தை முடித்த கையோடு ஸ்ருதி சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் அஜீத்துடன் சேர்ந்து இத்தாலியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார்.

சூர்யா

சூர்யா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள சிங்கம் 3 படத்தில் அனுஷ்காவோடு, ஸ்ருதி ஹாஸனும் உள்ளார். அனுஷ்காவுக்கு கொஞ்சம் சீனியர் கதாபாத்திரமாம்.

விக்ரம்

விக்ரம்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ஸ்ருதிக்கு சீயான் விக்ரமுடன் ஜோடி சேர மிகவும் ஆசையாக உள்ளதாம்.

English summary
Shruti Haasan, who has paired up with Ajith and Vijay, wants to act with Vikram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil