»   »  இங்கிட்டு 'தமிழ்' சிங்கம், அங்கிட்டு 'இந்தி' சிங்கம்: கலக்கும் ஸ்ருதி ஹாஸன்

இங்கிட்டு 'தமிழ்' சிங்கம், அங்கிட்டு 'இந்தி' சிங்கம்: கலக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ருதி ஹாஸன் மிலன் லூத்ரியா இயக்கும் பாத்ஷாஹோ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் ஏக பிசியாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். மூன்று மொழி படங்களில் நடித்து வரும் போதிலும் கால்ஷீட் சொதப்பிவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அதனால் இயக்குனர்களும் அவரை விரும்பி தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதி புதிய இந்தி படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆக உள்ளார்.

பாத்ஷாஹோ

பாத்ஷாஹோ

மிலன் லூத்ரியா அஜய் தேவ்கனை வைத்து பாத்ஷாஹோ என்ற படத்தை இயக்க உள்ளார். அவர் ஏற்கனவே அஜய் தேவ்கனை வைத்து தீவார், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பாய் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார்.

ஸ்ருதி

ஸ்ருதி

பாத்ஷாஹோ படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாஸனை தேர்வு செய்துள்ளார் மிலன். மற்றொரு ஹீரோயின் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. பாத்ஷாஹோ அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ரிலீஸாக உள்ளது.

விஜய்

விஜய்

ஸ்ருதி ஹாஸன் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஸ்ரீமாந்துடு படத்திலும், தமிழில் விஜய்யுடன் புலி படத்திலும் நடித்து முடித்துள்ளார். பூஜை படம் கைகொடுக்காவிட்டாலும் புலி ஸ்ருதிக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்

அஜீத்

ஸ்ருதி தற்போது சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து எடுத்து வரும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 3 படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shruti Haasan is set to act with Ajay Devgn in the upcoming movie Baadshaho to be directed by Milan Luthria.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil