»   »  ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு + ஆவேசம்.. பாராட்டித் தள்ளிய தமன்னா

ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு + ஆவேசம்.. பாராட்டித் தள்ளிய தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் நடிகை சுருதி ஹாசனின் நடிப்பு நன்றாக இருந்ததாக மற்றொரு நடிகையான தமன்னா, சுருதி ஹாசனை ட்விட்டரில் பாராட்டியிருக்கிறார்.

Shruti Haasan You look so Pretty - Says Tamannah

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் புலி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயின் மனைவியாக சுருதிஹாசன் நடித்திருந்தார்.

புலி படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் " புலி படத்தை சற்றுமுன்பு தான் பார்த்தேன்.

சுருதிஹாசன் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நிறைய அன்புடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

"நன்றி இனியவளே! அழகான தமன்னா உங்களுக்கு மிகவும் நல்ல மனது" என்று பதிலுக்கு தமன்னாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சுருதிஹாசன்.

தமன்னா தற்போது பாகுபலி 2 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் மேலும் கார்த்தி - நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் தோழா திரைப்படத்திலும் தமன்னா நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல சுருதிஹாசன் தற்போது வேதாளம் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் நடிகர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் சுருதிஹாசன் ஜோடி சேரவிருக்கிறார்.

2 அழகான நடிகைகள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் தானே...

English summary
Tamannah has all praise for Shruti Haasan. She is recently watched the latter's release Puli was wowed by her appearance in the film. "Just saw Puli, Shrutihaasan you look so pretty congratulations! lots of love - Says Tamannah.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil