»   »  தனது ‘டூப்’ உடன் போட்டோ... சபாஷ் ‘ஸ்ருதி’!

தனது ‘டூப்’ உடன் போட்டோ... சபாஷ் ‘ஸ்ருதி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் சண்டைக்காட்சிகளில் தனக்குப் பதில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் டூப் நடிகையுடன் போட்டொ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் போது பெரும்பாலும் நடிகர், நடிகைகளுக்கு, அவர்களுக்குப் பதில் அவர்களைப் போன்றே சாயலில் உள்ளவர்களை டூப்பாக பயன்படுத்துவர். ஆனால், அவர்களது முகம் வெளியில் தெரியாது. உயிரைப் பணயம் வைத்து நடிக்கும் அவர்களது திறமைக்கு பெரும்பாலும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.

Shruti Hassan gets clicked with her 'lovely' body double

ஆனால், மற்றவர்களில் இருந்து வேறுபட்டு சபாஷ் நாயுடு படத்தில் சண்டைக் காட்சியில் தனக்கு டூப் போட்ட நடிகையுடன் புகைப்படம் எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

தற்போது ஸ்ருதி, தனது தந்தை கமல் இயக்கத்தில் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்ருதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Haasan, who is currently busy shooting her upcoming film Sabaash Naidu in Los Angeles, has recently shared a picture wherein she can be seen enjoying with her body double.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil