நீங்க எப்படி இந்தி பேசுறீங்க...நெட்டிசனுக்கு சரியாக நோஸ்கட் கொடுத்த ஸ்ருதிஹாசன்

சென்னை : தென்னிந்தியாவில் இருந்து வந்த நீங்கள் எப்படி எப்படி இந்தி பேசுகிறீர்கள் என கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு சரியாக நோஸ்கட் கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் பதிலை பலரும் பாராட்டி உள்ளனர்.

கமல்ஹசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பல திறமைகளை வைத்துள்ளார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமான ஸ்ருதி, 2009ல் பாலிவுட்டில் லக் படத்தின் மூலம் நடிகையானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

டாப் நடிகர்களுக்கு ஜோடி

டாப் நடிகர்களுக்கு ஜோடி

இந்தியில் பல படங்களில் நடித்த ஸ்ருதி, அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கினார். தமிழில் சூர்யா, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

தெலுங்கில் செம பிஸி

தெலுங்கில் செம பிஸி

அடுத்தபடி தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக சாலர், நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக புதிய படம் போன்ற படங்களில் நடிக்க புக் ஆகி உள்ளார். இந்த படங்களின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் மும்பையில் காதலர் சாந்தனு ஹஜாரிகா மற்றும் தங்கை அக்ஷராவுடன் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

ஸ்ருதியின் நோஸ்கட் பதில்

ஸ்ருதியின் நோஸ்கட் பதில்

அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ருதி, என்னைச் சுற்றி செய்யக்கூடாத விஷயங்களை நீங்கள் செய்கிறீர்கள் என பட்டியலிட்டார்.. ஒருவர் என்னிடம், தெற்கில் இருந்து வந்த நீங்கள் எப்படி நன்றாக இந்தி பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஒருவேளை அவருக்கு அது வேற்று கிரகம் போல. நாங்கள் அனைவரும் படம் எடுக்கிறோம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற பாரபட்சம் பார்க்கப்படுகிறது என காட்டமாக கூறி உள்ளார்.

பல மொழிகள் தெரியும்

பல மொழிகள் தெரியும்

ஸ்ருதி அறிமுகமான படமே பாலிவுட் படம் தான். அது மட்டுமின்றி அவருக்கு தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சரளமாக பேச வரும். தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் அவர் தனி இசை ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X