»   »  தெனாலி கமல் மாதிரி பயத்திற்கு பெரிய பட்டியலே போடும் ராதிகா ஆப்தே

தெனாலி கமல் மாதிரி பயத்திற்கு பெரிய பட்டியலே போடும் ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே, டாப்ஸி ஆகியோர் தங்களுக்கு எதை பார்த்தால் பயம் என தெரிவித்துள்ளார்கள்.

நடிகைகள் படத்தில் தில்லாக குதிரை ஓட்டுவது, பாம்பை கையில் பிடிப்பது, பேயாக வந்து மிரட்டுவது போன்ற காட்சிகளில் நடித்தாலும் நிஜத்தில் பூச்சி, பல்லியை பார்த்து பயப்படுகிறார்கள்.

சும்மா சொல்லவில்லை, உண்மை தான். நீங்களே படித்துப் பாருங்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதிக்கு பல்லி, பாம்பு ஆகிவற்றை பார்த்தால் பயமாம். பாம்பை கூண்டில் அடைத்து வைத்திருந்தால் கூட தள்ளி நின்றே பார்ப்பாராம். பாம்பு பயத்தை போக்க கப்பார் படத்தில் நடித்தபோது அக்ஷய் குமார் ஒரு பாம்பை எடுத்து ஸ்ருதியின் கையில் வைத்துள்ளார். உடனே அவர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வாலுக்கு பறவைகளை பார்த்தால் பயமாம். சிறு வயதில் தோழிகள் வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த கிளி, புறாக்களை பார்த்து பயந்தாராம். அவை கண்ணில் கொத்திவிடுமோ என்ற பயமாம். பறவைகளை பார்த்தால் காஜலுக்கு தற்போதும் கை, கால் உதறுமாம். மாரி படத்தில் கையில் புறாவை வைக்குமாறு இயக்குனர் கூற அவருக்கு அழுகை வந்துவிட்டதாம். பின்னர் தனுஷ் தான் தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

டாப்ஸி

டாப்ஸி

டாப்ஸிக்கு இருட்டு என்றால் ஒரே பயமாம். இரவில் தனியாக படுத்தால் ஏதாவது தூக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று பயப்படுகிறார் டாப்ஸி. அதனால் அம்மா அல்லது தங்கையுடன் சேர்ந்து தான் தூங்குவாராம்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தேவுக்கு நீச்சல் தெரிந்தாலும் கடலில் படகு அல்லது கப்பலில் செல்லும்போது பயமாக இருக்குமாம். விமானத்தில் செல்லும்போது அது கீழே விழுந்து நொறுங்கிவிடுமோ என்று பயமாம். அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்திற்கு பட்டியலிடுகிறார் ராதிகா.

English summary
Actresses Shruti Haasan, Kajal Agarwal, Taapsee, Radhika Apte have revealed their fears about insects, snakes, darkness and others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil