»   »  வெள்ளைக்காரருடன் காதல்: ஸ்ருதி ஹாஸன் என்ன சொல்கிறார்?

வெள்ளைக்காரருடன் காதல்: ஸ்ருதி ஹாஸன் என்ன சொல்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஸ்ருதி ஹாஸன் காதலிப்பதாக கூறப்படும் மைக்கேல் லண்டனை சேர்ந்த நாடக நடிகர். அவருடனான காதலப் பற்றி எதுவும் கூற மறுத்துள்ளது ஸ்ருதி தரப்பு.

இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். முன்பு அவரும், நடிகர் சித்தார்த்தும் காதலித்தனர். இருவரும் மும்பையில் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தனர்.

அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.

காதல்

காதல்

ஸ்ருதி ராக் இசைக்குழு ஒன்றுக்கு பாட்டு பாட லண்டன் சென்ற இடத்தில் மைக்கேல் கார்செலை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். அவர்கள் மூன்று மாதமாக காதலித்து வருகிறார்களாம்.

மைக்கேல்

மைக்கேல்

இத்தாலியரான மைக்கேல் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அவர் பிரபலமான டிராமா சென்டர் லண்டனில் பயின்றவர். லண்டனை சேர்ந்த நாடக குழுவான டீப் டைவிங் மென்னில் நடிகராக உள்ளார்.

ஸ்ருதி

ஸ்ருதி

காதல் பற்றி ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியது இல்லை. தற்போதும் அப்படித் தான் என தெரிவித்துள்ளார்.

காதலர் தினம்

காதலர் தினம்

மைக்கேல் ஸ்ருதியுடன் காதலர் தினத்தை கொண்டாட லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். ஸ்ருதி ஹாஸனும், மைக்கேலும் விமான நிலையத்தில் ஜோடியாக வந்ததை பலரும் பார்த்துள்ளனர்.

English summary
Shruti Haasan's spokesperson said that she has never spoken about her personal life so far and will remain the same now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil