»   »  அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி ஹாஸன்

அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:வேதாளம் படத்தில் நடிக்கையில் அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்துவிட்டாராம் ஸ்ருதி ஹாஸன்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தில் அவருக்கு ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அஜீத் அண்மை காலமாக தான் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்து வருகிறார்.

Shruti Haasan

பிரியாணி விருந்து என்றால் கடையில் வாங்குவது அல்ல மாறாக தன் கையாலேயே சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறி வருகிறார். இந்நிலையில் வேதாளம் படத்தில் நடிக்கையிலும் அவர் படக்குழுவினருக்கு பிரியாணி அளித்துள்ளார்.

படக்குழுவினர் அஜீத் சமைத்த பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் ஸ்ருதி ஹாஸன் மட்டும் பிரியாணியை சாப்பிடவில்லை. நான் பிராமண வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அசைவம் சாப்பிடுவேன். ஆனால் தற்போது உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரியாணி வேண்டாம் என்று ஸ்ருதி அஜீத்திடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட அஜீத் சிரித்துக் கொண்டே சரி என்றாராம்.

English summary
Buzz is that Shruti Haasan has refused to eat the biriyani cooked by none other than Ajith Kumar as she is on diet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil