»   »  ரூ. 2 கோடி: ஸ்ருதிக்கு நஷ்டம், தமன்னாவுக்கு லாபம் #shruti

ரூ. 2 கோடி: ஸ்ருதிக்கு நஷ்டம், தமன்னாவுக்கு லாபம் #shruti

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனின் படத்தில் குத்தாட்டம் போட ரூ.2 கோடி கொடுத்தும் முடியாது என்று கூறிவிட்டாராம் ஸ்ருதி ஹாஸன்.

முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது மகன் நிகிலை ஹீரோவாக்கி பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் ஜாக்குவார் என்ற படத்தை தயாரித்து அதில் நிகிலை ஹீரோவாக்கியுள்ளார்.

ஜாக்குவர் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக தீபா சாத்தி நடித்து வருகிறார்.

தமன்

தமன்

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன், விதியுலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்து வரும் ஜாக்குவாருக்கு தமன் இசையமைத்துள்ளார்.

இருமொழி

இருமொழி

ஜாக்குவார் படம் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் தனது மகனை தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் அறிமுகம் செய்கிறார் குமாரசாமி.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸனின் குத்தாட்டம் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தெலுங்கிலும் ரிலீஸாகும் ஜாக்குவாரில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஸ்ருதியை கேட்டுள்ளனர்.

தமன்னா

தமன்னா

ரூ. 2 கோடி தருகிறோம் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுங்கள் என்று கேட்டும் ஸ்ருதி மறுத்துவிட்டாராம். இதையடுத்து தமன்னாவை கேட்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

English summary
Actress Shruti Haasan reportedly refused to do an item number in the upcoming Kannada movie Jaguar inspite of Rs. 2 crore remuneration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil