For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பாலோயர்களா.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நிகழ்ச்சிதான்!

  |

  சென்னை : நடிகை ஸ்ருதிகா பிரபல நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர் மறைந்த தேங்காய் சீனிவாசனின் பேத்தி.

  Recommended Video

  Shrutika Arjun கர்ப்பமா? Cook With Comali-யிலிருந்து விலகுகிறாரா?|Filmibeat Tamil

  இந்த பின்புலத்தோடுதான் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

  ஆனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கைக்கொடுக்காமல் போகவே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

  பத்து தல படப்பிடிப்பு தள வீடியோ..சிம்பு கையில் இருக்கும் குழந்தை யார்?பத்து தல படப்பிடிப்பு தள வீடியோ..சிம்பு கையில் இருக்கும் குழந்தை யார்?

  நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்

  நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்

  நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் பிரபல நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி. இவர் இந்த பின்புலத்துடன் கடந்த 2002ல் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். தொடர்ந்து ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் ஸ்ருதிகா நடித்துள்ளார்.

  சிறந்த தொழிலதிபர்

  சிறந்த தொழிலதிபர்

  அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஸ்ருதிகா. இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். ஹேப்பி ஹெர்ப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி சிறந்த தொழிலதிபராகவும் வலம்வந்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிகா. இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக இவர் இணைந்தார்.

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகா

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகா

  இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தார் ஸ்ருதிகா என்று எண்ணும்படியாகத்தான் இவரது என்ட்ரி இருந்தது. ஆனால் தொடர்ந்து தன்னுடைய சிரிப்பு, அழகான க்யூட்டான குழந்தைத்தனமான நடவடிக்கைகள் என ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவர் இயல்பே இப்படித்தானா அல்லது நடிக்கிறாரா என்பதுபோல இவரது சில நடவடிக்கைகள் காணப்பட்டன.

  டைட்டிலை வென்ற ஸ்ருதிகா

  டைட்டிலை வென்ற ஸ்ருதிகா

  இதையடுத்து பல சிறப்பான சமையல்களை ரசிகர்களுடனும் டீமுடனும் பகிர்ந்துக் கொண்டார் ஸ்ருதிகா. நெவர் கிவ் அப் என்பது தன்னுடைய தாரக மந்திரம் என்று கூறும் ஸ்ருதிகா, இந்த சீசனில் டைட்டிலையும் வெற்றி பெற்றார். இறுதிவரை இவர் ஜெயிப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

  பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி

  பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி

  ஸ்ருதிகா நடித்த சில படங்களில் இவருக்கு கிடைக்காத பிரபலத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தோடு தற்போது வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பிசினஸ், வீடு, குடும்பம் என அனைத்தையும் சிறப்பாக மேனேஜ் செய்து வரும் ஸ்ருதிகா, இவருக்குள் இவ்வளவு திறமையா என அனைவரையும் கேட்க வைத்துள்ளார்.

  ஒரு மில்லியன் பாலோயர்கள்

  ஒரு மில்லியன் பாலோயர்கள்

  இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு மில்லியன் பாலோயர்கள் உருவாகியுள்ளனர். இதையடுத்து வழக்கம்போல தனது குறும்புத்தனமான செய்கையுடன் ரசிகர்களுக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  7 மாதங்களில் வளர்ச்சி

  7 மாதங்களில் வளர்ச்சி

  ஐந்து ஆயிரத்தில் துவங்கிய தனது இன்ஸ்டாகிராம் பயணம், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்கி 7 மாதத்தில் ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரோஷினி, தர்ஷன் உள்ளிட்டவர்களும் இவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

  English summary
  Actress Shrutika arjun thanks to fans for reaching one million followers in Instagram
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X