»   »  எனக்கு திறமை இருக்கு, யார் அனுதாபமும் தேவை இல்லை: நடிகை ஸ்வேதா பாசு

எனக்கு திறமை இருக்கு, யார் அனுதாபமும் தேவை இல்லை: நடிகை ஸ்வேதா பாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் திறமைக்கு வேலை கொடுத்தால் போதும், யார் அனுதாபமும் தேவையில்லை என நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

ராரா, சந்தமாமா ஆகிய தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைதானார். பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Shweta Basu Prasad says she needs work but not sympathies

அதன் பிறகு அவர் இந்தி தொலைக்காட்சி தொடரான சந்திரா நந்தினியில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

மக்கள் என்னை பார்த்து ஏன் அனுதாபப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு வேலை தான் தேவை. யாருடைய அனுதாபமும் தேவை இல்லை. எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அறிவித்த ஹன்சல் மேத்தா ஒன்றும் செய்யவில்லை.

எனக்கு திறமை உள்ளது. வேலையை வாங்க எனக்கு தெரியும் என்றார்.

English summary
Actress Shweta Basu who was caught in sex scandal said that she doesn't want sympathy but work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil