»   »  நாவல் என்ன ஜூவல்... ஆணாக நடிக்கிறார் ‘சர்ச்சைப் புகழ்’ ஸ்வேதா மேனன்

நாவல் என்ன ஜூவல்... ஆணாக நடிக்கிறார் ‘சர்ச்சைப் புகழ்’ ஸ்வேதா மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாவல் என்ன ஜூவல் என்ற படத்தில் நடிகை ஸ்வேதா மேனன் ஆண் வேடத்தில் நடிக்க இருக்கிறார். மலையாளம், ஈரான் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

முன்னாள் மும்பை மாடல் ஸ்வேதா மேனன் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். பரபரப்பான சம்பவங்கள் மூலம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது ஸ்வேதா மேனனின் வாடிக்கை.

அந்தவகையில் தற்போது புதிய படமொன்றில் ஆண் வேடத்தில் அவர் நடிக்கிறார்.

களிமண்ணு...

களிமண்ணு...

கடந்த 2013ம் ஆண்டு தான் நடித்த ‘களிமண்ணு' என்ற மலையாளப் படத்தில், தனது நிஜ பிரசவக்காட்சியை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பொது இடத்தில் தன்னிடம் அத்துமீறிய ஆளும் கட்சி எம்.பியை வெளுத்து வாங்கினார்.

ஆண் வேடம்...

ஆண் வேடம்...

இப்படி தொடர்ந்து பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வரும் ஸ்வேதாமேனன், புதிய படமொன்றில் ஆண் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘நாவல் என்ன ஜூவல்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் பெண்...

ஈரானியப் பெண்...

இந்தியத் தாய்க்குப் பிறந்த ஈரானியப் பெண்ணைப் பற்றிய கதைக்களமாம். ஆனால் என்னமாதிரியான சூழலில் அவர் ஆணாக நடிக்கிறார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறது.

2 மொழிகளில்...

2 மொழிகளில்...

இப்படமானது மலையாளம், ஈரான் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இதனை ரஞ்சி லால் தாமோதரன் இயக்குகிறார்.

முதன்முறையாக...

முதன்முறையாக...

நாடகம் முதல் சினிமா வரை பெண் வேடமிட்ட நடிகர்கள் ஏராளம். ஆனால், ஆணாக வேடமணிந்து நடித்த நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். தற்போது அந்தப் பட்டியலில் ஸ்வேதா மேனனும் சேர்ந்துள்ளார்.

English summary
News has also been doing the rounds that Shweta will be seen playing a man in an upcoming film of hers, directed by Ranji Lal Damodaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil