என் மனைவி ஆபாச பட நடிகையா?.. மகள்கள் கேட்டால் எப்படி இருக்கும்?.. நடிகையின் கணவர் எமோஷனல்

திருவனந்தபுரம்: மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் என அவர் மீது சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மலையாள நடிகர் சங்கமான AMMA அமைப்பின் தலைவராகவும் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இந்நிலையில் அவரது கணவர் ஸ்ரீவில்சன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தமிழில் சிநேகிதியே, நான் அவன் இல்லை 2, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். தமிழைவிடவும் மலையாளத்தில்தான் அவர் படு பிஸியாக இருந்தார். 90களிலிருந்தே நடிக்க ஆரம்பித்த அவர்; ஏராளமான வெற்றி படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ரதி நிர்வேதம் உள்ளிட்ட படங்களிலும் போல்டான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

புகார்: நிலைமை இப்படி இருக்க அவர் மீது மார்ட்டின் என்ற கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர், 'ரதி நிர்வேதம், களிமண் போன்ற படங்களில் அதிக கவர்ச்சி காட்டி ஸ்வேதா நடித்திருக்கிறார். மேலும் ஆணுறை விளம்பரத்திலும் நடித்திருக்கிறார். நிதி தேவைக்காக அவர் ஆபாச படங்களில் நடித்தார்' என காவ்ல துறையில் புகார் கொடுத்திருந்தார்.. ஆனால் அந்தப் புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

நீதிமன்றம் சென்ற மார்ட்டின்: அதனையடுத்து மார்ட்டின் நீதிமன்றத்துக்கு சென்றார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது ஆபாசத்தை தடுத்தல் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியது.

Shwetha Menon s husband has clarified the complaint filed against her
Photo Credit:

தேர்தலில் வெற்றி: இதற்கிடையே ஹேமா கமிஷன் அறிக்கை எழுப்பிய அலையால் மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான AMMA அமைப்பில் முன்பு பதவி வகித்தவர்கள் கூண்டோடு வெளியேறினார்கள். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்வேதா மேனன் வெற்றியும் பெற்றார். மலையாள திரையுலக வரலாற்றில் பெண் தலைவராகவிருப்பது இதுவே முதன்முறை. இந்நிலையில் அவரது கணவர் ஸ்ரீவில்சன் ஸ்வேதா மேனன் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

என்ன சொன்னார்?: அவர் இதுகுறித்து பேசும்போது, "எனது மனைவி ஸ்வேதா மேனன் தலைமை பண்புமிக்கவர். நிச்சயம் தலைவராக சிறப்புடன் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் என்று ஸ்வேதா போட்டியிடும்போது வழக்கு தொடர்ந்தார்கள். அவர் மீதான நல்ல பிம்பத்தை உடைப்பதற்கே இதுபோன்ற வழக்குகளை அவர் போட்டார்கள். அந்த சமயத்தில் ஏராளமான ஆபாச குற்றச்சாட்டுக்களை உண்டாக்கினார்கள்.

மகள்களின் நிலைமை: அந்த குற்றச்சாட்டுக்களை கேட்டப்போதேல்லாம் எங்களின் இரண்டு மகள்களும் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள். அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதுதான் பெரும் கவலையாக இருந்த்ன. ஸ்வேதா மேனனும் இதனால் உடைந்துபோய்விடுவார் என்றுதான் பயந்தேன். ஆனால் அவர் தைரியமாக எதிர்கொண்டார். நல்லவேளையாக நீதியும், சட்டமும் எங்கள் பக்கம் நின்றது" என்று குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X