»   »  மீண்டும் சில்க் ஸ்மிதா

மீண்டும் சில்க் ஸ்மிதா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கோலிவுட்டை தனது கிளாமரால் பல ஆண்டுகள் கலக்கியவர் சில்க் ஸ்மிதா. தற்கொலை செய்து கொண்ட சில்க் நடித்து திரைக்கு வராமல் இருந்த படங்கள் பல. அதில் ஒன்று தான் தங்கத் தாமரை. இந்தப் படத்தை தூசி தட்டி, சில மாற்றங்கள் செய்து, புதுப்பொலிவூட்டி திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

கண்களின் அசைவிலேேய கவர்ச்சி அலையை சுனாமி மாதிரி பரப்பியவர் சில்க். இவருக்கு மாபெரும் ரசிகர் வட்டாரம் இருந்தது. ஒரு தாடிக்காரருடன் குடும்பம் நடத்திய சில்க், கடந்த 1996ம் ஆண்டு வடபழனியில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜயலெட்சுமி என்ற பெயரைக் கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா.

1979ம் வருடம் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர். மூத்த நடிகர்களான சிவாஜி, ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் ஆட்டம் ஆடியவர்.

பெரும்பாலான படங்களில் கவர்ச்சியையே காட்டிய சில்க், கிராமத்துப் பெண்ணாக முக்கியமான வேடத்தில் நடித்த படம் தான் தங்கத் தாமரை.

திருப்பதி ராஜன் என்பவர் தான் இந்தப் படத்தை தயாரித்து இயக்கினார். சில்க் சாகும் வரை நிதி நெருக்கடியால் படத்தை முடிக்க முடியாமல் தவித்தார் ராஜன். சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயனும் இதில் நடித்துள்ளார்.

இந் நிலையில் சில மாற்றங்கள் செய்து படத்தை வெளியிட திட்டமிட்டார் திருப்பதி ராஜன். படத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்று திருப்பதி ராஜனை கேலியாகப் பார்த்தவர்களுக்கு ஷாக் தரும் வகையில் வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து இந்தப் படத்துக்கு பெரும் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம்.

இந்தப் படத்தை வாங்கி திரையிட வினியோகஸ்தர்கள் பலர் போட்டி போட்டு வருகிறார்களாம். படத்தில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்களை கவரும் வகையில் அவர் ஆடிய காட்சிகளுக்கு சில குத்து நடிகைகளையும் குரூப் டான்ஸர்களையும் ஆட விட்டு, ஸ்மிதாவின் ஒரிஜினல் காட்சிகளையும் சேர்த்து 4 புதிய பாடல்களை உருவாக்கியுள்ளார்களாம்.

பொங்கல் திருநாளன்று திரைக்கு வரும் இந்தப் படத்தின் மூலம் அவரது ரசிகர்களுக்கு பெரு விருந்து காத்திருக்கிறது.

Read more about: silksmitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil