ஓப்பனாக காட்டியே ரசிகர்களை மயக்கும் கனவுகன்னி.. கவர்ச்சி ஆடையில் அலறவிட்ட சிம்பு பட நடிகை!

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா நாயுடு. அந்த படத்தில் சிம்புவின் முறை பெண்ணாக நடித்து இருப்பார். அந்த படத்திற்கு பின், வீராசாமி, ஜாம்பவான், வைத்தீஸ்வரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். தற்போது மேக்னா நாயுடு பதிவிட்ட கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் , தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்த மேக்னா நாயுடு,கடந்த 2017 ஆம் ஆண்டு, போர்ச்சுகலைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகுவல் ரெய்சைப் திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் போர்ச்சுகலில்லூயிஸ் வீட்டில் நடைபெற்றது. போர்ச்சுகலில் தனது கணவருடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின் போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து நடித்து வந்த அவர், அதன்பின் சினிமாவை விட்டு விலகினார்.

Meghna Naidu instagram
Photo Credit:

காதல் திருமணம்: நடிகை மேக்னா நாயுடுவிற்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன போதும், இதுவரை குழந்தை இல்லாததால், குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாவும், குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும், என் கணவரும் அதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக மேக்னா நாயுடு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம்: இயற்கை விரும்பியான நடிகை மேக்னா நாயுடு தனது கணவர் லூயிஸ் மிகுவல் ரெய்ஸ் உடன் பலமுறை இலங்கைக்குப் பயணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அங்குள்ள மக்களின் அன்பும், இயற்கையின் அழகை ரசிப்பது அவரின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சட்டையை கழட்டி விட்டு, கருப்பு நிற பிகினில் இயற்கையோடு இயற்கையாக கணவரை நெருக்கமாக கட்டிப்பிடித்து விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, ''எல்லாரும் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்'': நீங்க ஏன் எப்பவும் கடற்கரைக்குப் போறீங்க? அதற்கான என்னுடைய பதில் இதுதான்: நாம் மணலில் கால் வைத்தவுடன், உலகம் மெதுவாகிறது, கடலின் சத்தம் நம்மை அமைதியான மனநிலைக்குக் கொண்டுவருகிறது, கடற்கரை நமக்கு சிந்தனைக்கும் தளர்வுக்கும் ஒரு இடத்தை வழங்குகிறது, அன்றாட வாழ்க்கையின் வெறித்தனமும் அவசரமும் பின்னணியில் மறைந்து, அலைகளின் சத்தம் நம்மை தியான நிலைக்குத் தள்ளுகிறது,

கடல், அலைகளின் சத்தம், சூரியன், மணல், கடல் நம்மனதை மகிழ்ச்சிப்படுத்தும், அவசரம் இல்லை நாடகம் இல்லை... எளிமையானது ஆனால் மிகவும் இனிமையானது என பதிவிட்டுள்ளார். மேக்னா பதிவிட்ட இந்த கேப்ஷனை பார்க்காத நெட்டிசன்கள், அவரின் கவர்ச்சியான போட்டோவை பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X