»   »  பாக்யராஜ் ஜோடி சிம்ரன்?

பாக்யராஜ் ஜோடி சிம்ரன்?

Subscribe to Oneindia Tamil

பாக்யராஜுடன் ஜோடி போட்டு நடிக்க வருமாறு முன்னாள் சின்ன இடையழகி சிம்ரனை அழைத்துள்ளார்களாம்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற சூப்பர் பிளாப் படத்தைக் கொடுத்தவர் கவிகாளிதாஸ். ஒரு காலத்தில் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் கவி காளிதாஸ்.

ஆனால் பாக்யராஜ் ஸ்டைலில் இல்லாமல் வித்தியாசமான ஸ்டைலில் படம் சொல்வதை பாணியாகக் கொண்டவர் காளிதாஸ். பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய திரைக்குத் திரும்பி வருகிறார் காளிதாஸ்.

முதல் படமே போணியாகதாதல் சோர்ந்து போயிருந்த காளிதாஸ் இப்போது புத்தம் புது ஸ்கிரிப்ட்டோடு மீண்டும் கோடம்பாக்கத்தில் கொடியை நாட்ட வந்துள்ளார்.

முதல் படத்தைக் கொடுக்க ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தைத்தான் இப்போது காளிதாஸ் இயக்கவுள்ளார். செளத்ரியின் மகனான ரமேஷ்தான் ஹீரோ. இதில் பாக்யராஜ், முக்கிய வேடத்தில் வருகிறார். அதாவது ரமேஷின் அண்ணன் வேடத்தில்.

இதில் ரமேஷுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அதற்குள் பாக்யராஜ் ஜோடியை முடிவு செய்து விட்டார் காளிதாஸ். அதாவது அவரது முதல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த சிம்ரன்தான் அவர்.

சிம்ரனிடம் கதையைச் சொல்லி கால்ஷீட் கேட்டுள்ளாராம். பாக்யராஜ் ஜோடியாகவா என்று கவலையோடு கேட்டாராம் சிம்ரன். இருந்தாலும் இதுவரை மறுப்பு சொல்லவில்லையாம். சென்னைக்கு வருகிறேன். அதற்குள் யோசித்துச் சொல்கிறேன் என்று கூறியுள்ளாராம். நிச்சயமாக சம்மதிப்பார் என காளிதாஸ் நம்பிக்கையுடன் உள்ளார்.

ஏற்கனவே வடிவேலுவுடன் ஜோடி போட முடியுமா என்று கேட்டபோது டென்ஷன் ஆனவர் சிம்ரன். ஆனால் இதுவரை அவருக்கு உருப்படியாக தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இதனால் அப்செட்டில் உள்ள சிம்ரன், பாக்யராஜுடன் ஜோடி போடும் வாய்ப்பையும் நிராகரிப்பாரா அல்லது பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கே ஒரு சுவாரஸ்ய் பிளாஷ்பேக். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்தவர் பாக்யராஜ். ஆனால் அதிமுகவுக்காக அதி தீவிரமாக பிரசாரம் செய்தவர் சிம்ரன். இப்படி இரு துருவங்களாக கடந்த தேர்தலில் செயல்பட்ட இருவரும் இணைந்து நடித்தாலே அதுவே நல்ல பப்ளிசிட்டிதான் படத்துக்கு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil