»   »  எய்ட்ஸ் நோயாளியாக சிம்ரன்!!

எய்ட்ஸ் நோயாளியாக சிம்ரன்!!

Subscribe to Oneindia Tamil

மறு வருகையாக மலையாளத்தில் வெளியாகியுள்ள ஹார்ட்பீட்ஸ் படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்துள்ளாராம் ஸ்லிம் சிம்ரன்.

தென்னக சினிமா ரசிகர்களை ஒரு காலத்தில் தனது உடுக்கு இடையால் உலுக்கியவர் சிம்ரன். திடீரென கல்யாணமாகி, காணாமல் போன சிம்ரன், குழந்தை பெற்ற கையோடு மறுபடியும் நடிப்புச் சேவையாற்ற சென்னைக்கு வந்தார்.

கணவரோடு தங்கி வாய்ப்புகளைத் தேடி வந்தார். ஆனால் அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு ஆடிப் போன தயாரிப்பாளர்கள் கல்யாணமான நடிகைக்கு இவ்வளவு கொடுப்பதா என்று கழன்று கொண்டனர். இதனால் தமிழில் புதுப் படமே சிக்காமல் சோகத்தில் இருந்தார் சிம்ரன்.

புதிய படங்கள் கிடைக்காத சோகத்தில் இருந்த சிம்ரனைத் தேடி விளம்பரப் படங்கள் நிறைய வந்தன. இதனால் வந்தது வரை லாபம் என்று விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிம்ரன்.

இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையாக ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன். இருந்தாலும் மறுபக்கம் சினிமாவில் நடிக்கவும் தீவிரமாக முயற்சித்து வந்தார் சிம்ரன்.

இந்த நிலையில்தான் மலையாளத்தில் ஹார்ட்பீட்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள். கடந்த வாரம் இப்படம் கேரளாவில் வெளியானது.

நம்ம சிம்ரன் நடித்துள்ள படமாச்சே என்று ரசிகர்களும் பொங்கிக் கிளம்பி படத்தைப் பார்த்தனர். ஆனால் படத்தில் சிம்ரன் எய்ட்ஸ் நோயாளியாகவும், கடைசியில் இறந்து போவதாகவும் சிம்ரனின் கேரக்டர் அமைந்திருந்ததைப் பார்த்து பெரும் ஏமாற்றமடைந்து விட்டனராம்.

சிம்ரனை இப்படிப்பட்ட கோலத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காததால், படம் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து விட்டது. இதனால் இனிமேல் இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்ரன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil