»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை சிம்ரன் வந்து போனதால் தங்களது கிராமம் தீட்டுப் பட்டு விட்டதாக தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமமக்கள் பயந்து போயுள்ளனர். இதையடுத்து அங்கு பல்வேறு பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் கம்பளத்துநாயக்கர் என்ற ஜாதியைச் சேர்ந்த தெலுங்கு மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீரபாண்டியகட்டபொம்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பல்வேறு சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் இந்தக்கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள் இந்த கம்பளத்து நாயக்கர்கள். அதில் ஒன்று மாதவிலக்காகும்.அந்த நாட்களில் பெண்கள் கிராமத்தை விட்டு வெளியில் தான் தங்க வேண்டும். ஊருக்குள் தஙக தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிராமத்தில் சமீபத்தில் "கோவில்பட்டி வீரலட்சுமி" என்ற படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் சிம்ரன்உள்ளிட்டவர்கள் நடித்தனர். ஷூட்டிங் முடிந்து படக்குழுவினர் ஊரை விட்டுத் திரும்பியதும் கிராமத்தில் சிலநாய்கள் செத்தன.

படக் குழுவில் இருந்த சிம்ரன் உள்ளிட்ட துணை நடிகைகள் மீது இவர்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.இவர்களில் யாரோ மாதவிலக்காகி இருந்ததால் தான் இந்த தீட்டு ஏற்பட்டதாக கிராமத்து பெரிசுகள் நம்புகின்றனர்.

இதையடுத்து கிராமம் முழுவதும் திரண்டு இதை போக்க என்ன செய்வது என்று விவாதித்தனர்.

பின்னர் பரிகாரம் செய்யவும் தங்களது குல தெய்வமான ஜக்கம்மாவை சாந்தப்படுத்த சிறப்பு பூஜைகள் செய்வதுஎன்றும் முடிவு எடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக சிம்ரன் தங்கி நடித்த ஜெயராம நாயக்கர் என்பவரது குடிசை வீடு பூட்டப்பட்டது. பூஜை முடியும்வரை வீட்டைத் திறக்கக் கூடாது என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பிறகு சிம்ரன் மற்றும் துணை நடிகைகள் தங்கியிருந்த பகுதியில் அவர்கள் கால் பட்ட இடத்திலிருந்து மண்ணைஎடுத்து வந்து பானையில் போட்டு வைத்துள்ளனர். அறுவடைக் காலம் முடிந்ததும் அந்த பானைக்கு பூஜைநடத்தவுள்ளனர்.

ஆடு, கோழி வெட்டி பூஜை செய்து அதன் ரத்தத்தை கிராமம் முழுவதிலும் தெளித்து பரிகாரம் செய்யவும்திட்டமிட்டுள்ளனர்.

இந்த கூத்தை குறித்து அறிந்த "கோவில்பட்டி வீரலட்சுமி" படக்குழுவினர் நொந்து போய் உள்ளனர். இனிமேல்இந்தப் பகுதியில் சூட்டிங் வைக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

தமிழகத்தில் மூடப் பழக்கங்களுக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil