»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் அதிரடி ஹீரோயினாக நடித்து வரும் கோவில்பட்டி வீரலட்சுமி படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்புஓகனேக்கல் அருவிப் பகுதிகளில் நடந்தது.

அப்போது சிம்ரனிடம் நெருங்கிச் சென்ற ரசிகர் ஒருவர், கமல் வரவில்லையா என்று குறும்புத்தனமாக கேட்க அந்தரசிகரை துரத்தி துரத்தி அடித்தார் சிம்ரன். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓகனேக்கல் அருவி, மிருகக் காட்சி சாலை, காட்டுப் பகுதிகளில் கோவில்பட்டி வீரலட்சுமியின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இயக்குனர் ராஜேஷ்வர் படத்தை இயக்கி வருகிறார்.

இறுதிக் கட்டப்படப்பிடிப்பில் கடந்த 3 நாட்களாக சிம்ரனும் கலந்துகொண்டுள்ளார். இதற்காக ஓகனேக்கலில்உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கி இடைவிடாமல் நடித்துக் கொண்டுள்ளார் சிம்ரன்.

படப்பிடிப்பு முடிந்து மாலையில் சிம்ரன் கிளம்பியபோது ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு குறும்புக்கார ரசிகர், என்னசிம்ரன் கமல் வரலையா என்று கேட்டார்.

அவ்வளவுதான், சிம்ரனுக்கு வந்ததே கோபம். கையில் இருந்த பேக்கை வைத்து ரசிகரை தாக்கினார். இதனால்பயந்து போன ரசிகர் அங்கிருந்து ஓட முயன்றார்.

ஆனால் சிம்ரன் விடாமல், இந்தியிலும் ஆங்கிலத்திலும் திட்டியவாறே அந்த ரசிகரை துரத்தி துரத்தி அடித்தார்.

இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. போலீஸார் விரைந்துவந்து சிம்ரனை சமாதானப்படுத்தினர். இருந்தும்,ஆத்திரம் குறையாமல் திட்டிக் கொண்டே சென்றார் சிம்ரன்.

இப்படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார் சிம்ரன். இதனால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டார்கள். ஓய்வு நேரங்களில் ரசிகர்களுக்கு சிம்ரன் ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்தார்.

அப்படி ஆட்டோகிராப் கேட்பது மாதிரி சென்ற ஒரு ரசிகர் தான், கமல் வரவில்லையா என்று கேட்டு அடி வாங்கித்திரும்பியுள்ளார்.

ஏற்கனவே, தனது கல்யாண விஷயத்தில் கடந்த வாரம் செய்திகள் அடிபட்டார் சிம்ரன். இப்போது சிம்ரனிடம் அடிபட்டுள்ளார் ஒரு ரசிகர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil