Simran: என்ன சிம்ரன் இதெல்லாம்.. 24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய பாட்டுக்கு ஆட்டம் போட்ட சிம்ரன்!

சென்னை: தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதில் இருந்து சிம்ரன் சற்று விலகி இருந்தாலும், இவருடைய ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது, சிம்ரன் லண்டனில் தனது ரசிகர்களுடன் இணைந்து 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனமாடிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை தான் சிம்ரன், இவரின் நடன அசைவுக்கும், துள்ளல் நடிப்புக்கும் மயங்காதவர்களே இல்லை. பலரின் கனவு கன்னியாக இருந்த சிம்ரன், 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகி வசூலை அள்ளிய 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த அசத்தினார். அதன்பின் டூரிஸ்ட் பேமிலி படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

Simran dance video
Photo Credit:

நடிகை சிம்ரன்: இந்நிலையில் சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'யூத்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு ரசிகர்களுடன் இணைந்து நடனமாடி உள்ளார். லண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில், தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார். அந்த காணொலியில் சிம்ரனின் உற்சாகமான நடனம் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் தெளிவாகத் தெரிகிறது. ரசிகர்கள் அவரது நடன திறமையையும், வசீகரத்தையும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். "நீங்கள் எப்போதும் மிகச் சிறந்தவர்" (You are G.O.A.T - Greatest Of All Time) என்று ஒரு ரசிகர் கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

ஆல் தோட்ட பூபதி: வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் யூத், இந்த திரைப்படத்தில், நடிகை சிம்ரன் 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனமாடி இருந்தார். மணி சர்மா இசையில் உருவான இந்த இப்பாடலின் சிம்ரன் ஆடிய நடனம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இன்றும் இந்த பாடல் சிம்ரனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X