ரஜினிகாந்த்தின் கூலி.. கதை நல்லா இருக்கணும்.. சிம்ரன் ஓபனா விமர்சனம் செஞ்சிட்டாங்களே.. சூப்பர் போங்க

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக படம் பின்னடைவையே சந்தித்தது. அதேசமயம் வசூலில் சூப்பர் ரெஸ்பான்ஸ் என்று படக்குழு தெரிவித்திருந்தாலும்; அதுவும் பெரிய திருப்தியை தரக்கூடியதாக இருக்கவில்லை. இந்நிலையில் கூலி படம் பற்றி சிம்ரன் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் படம் பற்றி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரிய கவனத்தையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்த இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம் என பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்தார்கள். மல்டி ஸ்டாரர் மற்றும் பான் இந்தியா படமாக இது உருவாகியிருந்ததால் படக்குழு எதிர்பார்ப்பை ஏற்றாமலே இயல்பாகவே ஹைப் ஏறியது குறிப்பிடத்தக்கது.

அப்செட்டில் ரசிகர்கள்: உச்சக்கட்ட ஆவலோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே அப்செட் தொற்றிக்கொண்டது. ஆனால் ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். ஒவ்வொரு சீனும் மாஸாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். இருப்பினும் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி கழுவில் ஏற்றினார்கள். ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க இருந்ததால்; ஒன்றுமே கனெக்ட் ஆகவில்லை என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.

Simran has given a review of the Rajinikanth-starrer Coolie
Photo Credit:

என்ன காரணம்?: மேலும் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி ஆகிய படங்களை எல்லாம் கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவைகளை நம்பி எடுத்தார். அவர் பெரிய ஹீரோக்களுக்கு படம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே மேற்கூறிய மூன்று விஷயங்களை மொத்தமாக மறந்துவிட்டு ஸ்டார்டமை வைத்து மட்டுமே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் பத்து படங்கள் இல்லை அதற்கு முன்னதாகவே அவரை சினிமாவிலிருந்து ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வசூலில் சூப்பரா?: இப்படம் தொடர்பான அறிவிப்பு வந்த நாள் தொட்டே கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் முதல் தமிழ் படமாக இது இருக்கும் என்று பலரால் கணிக்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் ப்ரீ புக்கிங்கும் இருந்தது. இருப்பினும் ரிலீஸான பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. முதல் நாளில் 151 கோடி ரூபாயும், நான்கு நாட்கள் முடிவில் 404 கோடி ரூபாய் வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தாலும்; இந்த நம்பர் எல்லாம் இல்லை; இதைவிட குறைவாகத்தான் வசூலித்திருக்கும் என்றும் திரைத்துறை வல்லுநர்கள் சிலர் தொடர்ந்து கூறிவருவதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் கூலி படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் சிம்ரன் ஓபனாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகை நான். அவருடைய அனைத்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன். இந்தப் படத்தையும் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால்தான் அனைவருக்குமே பிடிக்கும். ஆனாலும் ரஜினி எப்போதும் தனது சிறந்த நடிப்பையே தந்துகொண்டிருக்கிறார். கூலியிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள், பவர் பேக்கான காட்சிகள் அருமையாக இருந்தன. படத்தின் கதைகூட எனக்கு பிடித்திருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X