அடடே, ரஜினி பற்றி சிம்ரன் சொல்வது புதுசா இருக்கே!

By Siva

சென்னை: ரஜினி பற்றி சிம்ரன் புது விஷயத்தை கூறியுள்ளார்.

திருமணம், குழந்தைகள் என்றான பிறகு சினிமாவில் இருந்து சில காலம் தள்ளி இருந்த சிம்ரன் மீண்டும் நடிக்க வந்தார். முதல் இன்னிங்ஸை போன்று அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ் அமையவில்லை.

இந்நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட படம் தான் என் உண்மையான கம்பேக். இதற்காக நான் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி சார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக என் கெரியர் எப்படியோ இருந்தது. பல பொறுப்புகள் இருந்ததால் எந்த வகை படங்களை தேர்வு செய்வது என்று தெரியவில்லை.

ரஜினி

ரஜினி

பேட்ட படத்தில் நான் மிகவும் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். ஃபிட்டாக இருப்பது தான் நமக்கு நாம் கொடுக்கும் சிறந்த பரிசு. டயட், யோகா ஆகியவற்றால் நான் இப்படி இருக்கிறேன். ரஜினி சாருடன் வேலை செய்ததால் அழகாக தெரிகிறேன் என்று நினைக்கிறேன். (இது புதுசா இருக்கே சிம்ரன்).

பெரிய படம்

பெரிய படம்

பேட்ட பெரிய படம். அதை விட எனக்கு மனசு இல்லை. பல வகை கதைகளை படமாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். நடிகரிடம் இருந்து எப்படி வேலை வாங்குவது என்பது அவருக்கு நன்கு தெரிந்துள்ளது. நான் பல காலமாக ரஜினி ரசிகை. பல முறை நான் அவரை போன்று நடக்க, கண்ணாடி அணிய முயற்சி செய்துள்ளேன்.

பதட்டம்

பதட்டம்

பேட்ட படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பதட்டமாக இருந்தது. ரஜினி சாரை பார்த்ததும் வசனத்தை மறந்து விடுவேன் என்று நினைத்தேன். டென்ஷன் ஆக வேண்டாம் நாம் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறோம் என்று கூறி ரிலாக்ஸ் செய்ய வைத்தார் ரஜினி சார் என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X