»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையே என அவரது தந்தை அசோக் கூறியுள்ளார்.

ராஜூ சுந்தரம், கமல்ஹாசன் என பலருடன் காதல், நட்புடன் இருந்த சிம்ரன் அதை முறித்துக் கொண்டார். பின்னர் அவரது பைலட் உறவினர் ஒருவருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வந்தன.

ஆனால், அதை சிம்ரன் மறுத்தார். இந் நிலையில் சிம்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் என்றும், மாப்பிள்ளை பைலட் இல்லை, டிராவல்ஸ் நிறுவன அதிபர் என்றும் சிம்ரனின் தந்தை அசோக் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில்,

ராஜூ சுந்தரத்துடன் சிம்ரனுக்கு காதல் என்று தெரிந்தபோது அதை நாங்கள் அவமானமாகக் கருதினோம். இதையடுத்து கமலுடன் காதல் என்றார்கள். சிம்ரனால் கமல்- சரிகா பிரிந்தார்கள் என்றும் தகவல் வந்ததால் நொந்து போனோம்.

சிம்ரனுடன் எங்களது தொடர்புகளை அறுத்துக் கொண்டோம். எங்களுக்கும் சிம்ரனுக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் இருந்தது.

இந் நிலையில் தான் திடீரென தீபக் என்ற வாலிபருடன் சிம்ரன் எங்கள் வீட்டுக்கு வந்தாள். தான் இவரைத் தான காதலிப்பதாகவும் எங்களை சேர்த்து வைத்து ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

இதையடுதது பழசை எல்லாம் மறந்துவிட்டு சிம்ரனை வீட்டோடு சேர்த்துக் கொண்டோம். தீபக் டெல்லியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நல்ல குடும்பத்துப் பையன். இதனால் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டோம்.

இதையடுத்து இருவருக்கும் டெல்லியில் வைத்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்தோம். ஜனவரியில் இருவருக்கும் திருமணம் நடக்கும். அதற்குள் சிம்ரன் தனது படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடுவாள் என்றார்.

நிச்சயதார்த்த போட்டோ ஒன்று கொடுங்கேளன் என்று நிருபர் கேட்டபோது, அது என்ற சினிமா ஸ்டில்லா என்று கேட்டு நிருபரை விரட்டியடித்தார் அசோக்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil