»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி வீரலட்சுமியில் சிம்ரனுக்குக் குரல் கொடுத்துள்ளவர் டிவி நடிகை தீபா வெங்கட். வழக்கமாகஅவருக்குக் குரல் தருவது சவீதா தான்.

ஆனால், கோவில் பட்டி வீரலட்சுமியில் முதலில் சிம்ரனை சொந்தக் குரலிலேயே பேச வைக்கத் தான் முடிவாகிஇருந்தது. ஆனால் படத்தின் கதையும், சிம்ரனின் நடிப்பும் நின்றாக இருப்பதால், படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்ஆக்க இயக்குனர் ராஜேஷ்வர் முடிவு செய்தார்.

இதையடுத்து சிம்ரனை அவரது கொஞ்சு குரலில் பேச வைத்து படத்தை பிளாப் ஆக்கி விடக் கூடாது என்று முடிவுசெய்து, சிம்ரனின் சம்மதம் பெற்று அவருக்கு தீபா வெங்கட்டை பின்னணி பேச வைத்துள்ளார்.

வழக்கமாக குரல் கொடுக்கும் சவீதாவின் குரலில் ஆக்ரோஷம் இல்லை என்பதால் தீபாவை புக் செய்தார்களாம்.

தீபாவும் நெல்லைப் பகுதி தெற்கத்தி பாஷையை சரளமாக பேசி கேரக்டருக்கு வெயிட் கொடுத்துள்ளார். சிம்ரன்பேசும் வசனங்கள் பவர்ஃபுல்லாக இருப்பதாக ஆடியன்ஸ் பக்கம் வரவேற்பு இருப்பதால் ராஜேஷ்வரும்சந்தோஷத்தில் உள்ளார்.

ரஜினியின் பாபா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் தீபா வெங்கட் என்பது தான் உங்களுக்குத்தெரியுமே.

கொசுறு: தனது கட்சியினர் அனைவரும் கோவில்பட்டி வீரலட்சுமியை தவறாமல் பார்க்குமாறு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அன்புக் கட்டளை இட்டிருக்கிறாராம். மேல்ஜாதிக்காரர்களால் பாதிக்கப்படும் தலித் பெண் கேரக்டர்தான் கோவில்பட்டி வீரலட்சுமியின் கதை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil