»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் சிம்ரனுக்கு பெரும் ஆச்சரியம் தந்திருக்கிறார் இயக்குனர் பாலா.

தனது பிதாமகன் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட சிம்ரனை அழைத்தார். அதில் சிம்ரன் ஒரு நடிகையாகவேநடிக்கிறார்.

அந்தப் பாடல் காட்சிக்கு தனக்குத் தரப்பட்ட உடைகளை, வழக்கம் போல் தனது ஸ்டைலில் அணிந்து கொண்டுவந்தாராம் சிம்ரன். தொப்புள் தெரிய லோ-ஹிப்புடன் கலகலப்பாக வந்து நின்ற சிம்ரனை ஏற, இறங்க பார்த்தபாலா, நடன இயக்குனரைக் கூப்பிட்டு ஏன் இப்படி அசிங்கமா டிரஸ் பண்ணியிருக்கீங்க என்று கத்தியிருக்கிறார்.

நாங்க பண்ணலை. சிம்ரனே பண்ணிக்கிட்டாங்க என்று பதில் வர, அவரிடம் போன பாலா, தொப்புளுக்கும்இவ்வளவு கீழே எல்லாம் டிரஸ் பண்ண வேண்டாம். என் படத்துக்கு இந்த கவர்ச்சியெல்லாம் தேவையில்லைஎன்றாராம்.

ஆனால், என் ரசிகர்களுககு என் இடுப்பும், அதைச் சுற்றிய கவர்ச்சியும் முக்கியம் என்று சிம்ரன் கூற, என் படத்துக்குஇந்த மாதிரி டான்ஸே தேவையில்லை என்று கூறிவிட்டாராம் பாலா.

இதையடுத்து ஆப் ஆன சிம்ரன், பாலா சொன்ன மாதிரி உடைகளை சரி செய்து கொண்டு வந்து ஆடிவிட்டுப்போனாராம். போகும்போது பாலாவைப் பாராட்டவும் தவறவில்லையாம்.

பிதாமகனை முடித்த கையோடு அர்ஜூனுடன் ஒற்றன் படத்தையும் நடித்து முடித்துவிட்ட சிம்ரனுக்கு இப்போதுகைவசம் ஒரு படமும் இல்லை.

தமிழ் சினிமாவில் படு பிசியாக இருந்த சிம்ரன் திடீரென்று தனது படங்களைக் குறைத்துக் கொண்டார். பலபடங்களுக்கு வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்தார். தவிர்க்க முடியாத படங்களில் மட்டுமே தொடர்ந்துநடிக்க ஒப்புக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது கடைசியாக அவரது கையில் இருந்த ஒற்றன் படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். இப்போது அவரது கையில் ஒரு படம் இல்லை.

விரைவில் தனது காதலரைத் திருமணம் செய்து கொள்ள சிம்ரன் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். இதனால் பலசினிமா கம்பெனிகள் தனக்கு வைத்துள்ள பாக்கியை வசூலிக்கும் வேலையில் இப்போது தீவிரமாக இருக்கிறார்.

அப்ப, அவ்ளோதானா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil