»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரன் தனது தமிழ் சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட தயாராகிவிட்டார்.

இந்தியில் தேரே மேரே சப்னே என்ற பிளாப் படத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த சிம்ரன் படு ஹிட் ஆனார்.நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கவனிக்கப்பட்டார். வாலி அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது.

தனது இடுப்பழகால் இளைஞர்களை ஆட்டினார். தங்கை மோனலையும் சினிமாவுக்குக் கொண்டு வந்தார். அவரைகாதல் காவு வாங்கியது. இதையடுத்து மும்தாஜ், நடன மாஸ்டர் கலாவுடன் மோதினார். அப்பாசுடன் காதல், பின்னர்ராஜு சுந்தரம் அதைத் தொடர்ந்து கமல் சிறிது நாட்கள் சிம்ரனின் வாழ்வில் ஆக்கிரமித்தார்.

இந் நிலையில் பழைய நண்பரான தீபக்குடன் காதல் ஏற்பட்டுவிட சினிமா வாய்ப்புகளை குறைத்துக் கொணடார்.சில மாதங்களுக்கு முன் இரு வீட்டினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணத்துக்குரெடியாகிவிட்ட சிம்ரன் கடைசியாக நடித்துக் கொண்டிருந்த படம் நியூ.

இதில் சிம்ரன் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதால் சூட்டிங் ஸ்பாட்டில் கண்ணீர் மல்க அனைவரிடமும்விடை விடை பெற்றாராம். மணிரத்னத்தின் புராஜெக்டில் இருந்து விலகிக் கொண்டுவிட்ட சிம்ரன், இனி தமிழில்நடிக்க வாய்ப்பில்லை.

தமிழி சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து வர வேண்டிய பாக்கிகளை வசூலித்துக் கொண்டு விரைவில்மும்பைக்கு ஒன்ஸ் பார் ஆலாக பிளேன் ஏற இருக்கிறார் சிம்ரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil