TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ஜிலேபியா... மொளகா பஜ்ஜியா.. வாணி கபூருக்கு ஏத்த பட்டப் பெயர் சொல்லுங்க!
வாணி கபூர்... வடக்கிலிருந்து வந்திருக்கும் புதிய சிம்ரன் இந்த ஆறடி உயர அழகி.
முதல் படமே பெரிய பேனரில், படு பிரமாண்ட தயாரிப்பாக அமைந்துவிட்டது. அதுதான் ஆஹா கல்யாணம்.
அதேபோல அவரது அறிமுக நிகழ்வும் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அமைந்தது.
சிம்ரன்
ஹோட்டல் லீலா பேலஸில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வாணி கபூரை அறிமுகப்படுத்தும் பொறுப்பு நடிகை சிம்ரனுக்கு வழங்கப்பட்டது.
குஷ்புன்னா இட்லி, சிம்ரன்னா இடையழகி
அப்போது சிம்ரனிடம், குஷ்புன்னா இட்லி, சிம்ரன்னா இடையழகின்னு ஒரு அடையாளப் பெயர் இருப்பது போல, இந்த வாணி கபூருக்கு ஒரு பெயர் சொல்லுங்களேன் என்று தொகுப்பாளினி ரம்யா கேட்டுக் கொண்டார்.
விளக்கிய சிம்மு...
தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த வாணிக்கு ரம்யா சொன்னது புரியவில்லை. பின்னர் அவரிடம் ஆங்கிலத்தில் சமாச்சாரத்தை விளக்கமாக சொன்னார் சிம்ரன்.
மொளகா பஜ்ஜி
உடனே, எனக்கு மொளகா பஜ்ஜி புடிக்கும் என்று வாணி கூற, அப்படின்னா இனி மொளகா பஜ்ஜி வாணி என்று பட்டப் பெயர் சூட்டினார்கள். அவரும் அர்த்தம் புரிந்தோ புரியாமலோ ரசித்து சிரித்தார்.
ஜிலேபி
உடனே இடைமறித்த சிம்ரன், 'வேணும்ணா ஜிலேபின்னு வச்சிக்கலாம்.. ஜிலேபி வாணி கபூர்' என புதிய நாமகரணம் சூட்டினார்!
ரொம்ப்ப நல்லவங்க
அடுத்து வாணிக்கு இப்படி அட்வைஸ் பண்ணார் சிம்ரன்: தமிழ் மக்கள் மிகவும் அன்பானவர்கள், நல்லவர்கள். மிகவும் ஊக்கம் அளிப்பவர்கள். குஷ்பூவுக்கு கோயில் கட்டியதோடு, இட்லிக்கு அவர் பெயரையே வைத்தவர்கள். நூறு சதவீதம் உழைப்பைக் கொடு, நல்லா வருவே.
வந்தாரை வாழ வைப்பவர்கள்...
உடனே வாணி கபூர், "எனக்கு தெரியும். எனக்கு தமிழ் மக்களை ரொம்பப் பிடிக்கும், வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள்,' என்று தட்டுத்தடுமாறி சொல்லி கைத்தட்டல் பெற்றார்.