»   »  கர்ப்பத்துடன் நடிக்க வரும் சிம்ரன்

கர்ப்பத்துடன் நடிக்க வரும் சிம்ரன்

Subscribe to Oneindia Tamil

3 மாத கர்ப்பத்துடன் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை சிம்ரன்.

தமிழ் சினிமா ரசிகர்களின் 7 வருட தூக்கத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்தவர் சிம்ரன். கவர்ச்சியை மட்டுமேவைத்து சுமார் 20 படங்கள் வரை கதையை ஓட்டியவர், வாலி படத்திலிருந்து நடிப்பிலும் கலக்க ஆரம்பித்தார்.

அப்போது டேக் ஆஃப் ஆனவர்தான், கல்யாணம் ஆகும் வரை தரையிறங்கவே இல்லை. அப்பாஸ், ராஜூசுந்தரம், கமல் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டவர் திடீரென மெட்ராசை காலி செய்துவிட்டு டெல்லிக்குப் போனார்.இளம் வயது நண்பர் தீபக் பாஹாவைக் கைப்பிடித்தார்.

விஜய்யுடன் பாதியில் விட்டுவிட்டுப் போன ஒரு பாடல் காட்சியை முடித்துத் தரவும், நியூ படத்தில் சிலகாட்சிகளை முடிக்கவும் மீண்டும் கோலிவுட் வந்தவர் அப்படியே தனது ஹேண்ட்சம் கணவர் தீபக்கைகதாநாயகனாக்க வாய்ப்பு தேடினார். கணவரை கதாநாயகனாக்கினால் என் கால்ஷீட் தள்ளுபடி விலையில்கிடைக்கும் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கு பேரம் பேசிப் பார்த்தார்.

இதற்காக பல வாரங்கள் சென்னையிலேயே முகாமிட்டும் பலன் கிடைக்கவில்லை. இந் நிலையில், சிம்ரன்கர்ப்பமாகிவிட கணவருடன் மீண்டும் மும்பைக்கே போனார்.

சிம்ரன் அவ்வளவுதான்; குடும்பம் குட்டி என செட்டிலாகிவிட்டார், இனி நாம் த்ரிஷாவுக்கு மாறலாமா அல்லதுஜோதிகாவுக்கு மாறலாமா என்று அவரது ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்க, மறுபடியும் சிம்ரன் கோலிவுட்டிற்குவருகிறார் என்ற செய்தி வந்துள்ளது.

சிம்ரனை மீண்டும் அழைத்து வந்த புண்ணியத்தை, விஜயா சினி எண்டர் பிரைசஸ் என்ற பட நிறுவன அதிபர் எம்.ஸ்ரீதரனும், இயக்குனர் ராஜகோபாலும் பெற்றிருக்கிறார்கள்.

இயக்குனர் தனது கதைக்கு சிம்ரன் இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று பீல் இருவரும் மும்பைபோயிருக்கிறார்கள். சிம்ரனை சந்தித்து சந்தித்து, கதை சொன்னார்கள்.

கதை பிடித்துப் போன சிம்ரன், தான் கேட்ட சம்பளத்தைத் தந்தால் நடிப்பதாகக் கூறியிருக்கிறார். சிம்ரன் கேட்டசம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளரும் சம்மதித்து விட்டார்.

அதே நேரத்தில் சிம்ரன் இரண்டு கண்டிஷன்களும் போட்டிருக்கிறார். நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.அதனால் வேகமோன டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ண முடியாது. படத்தில் சின்ன சின்ன நடனஅசைவுகளை வைத்துக் கொள்ளலாம். இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்றுகூறியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் பக்காவாக இருப்பதால், இரண்டே மாதங்களில் முடித்து விடலாம் என்றுஇயக்குனரும் சம்மதம் தெரிவித்துள்ளார்

படத்தின் பெயர் கிச்சா, வயது 16. இரண்டு இளைஞர்களையும், ஒரு பெண்ணையும் சுற்றி நகரும் முக்கோணகாதல் கதை.

கதாநாயகர்களாக ஜெய் ஆகாஷ், பாய்ஸ் மணிகண்டன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

அடுத்த மாதம் நாகர்கோவிலில் தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சிம்ரன் 1ம் தேதி அங்குவந்திறங்கவுள்ளாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil