»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் செய்தி 1: சிம்ரனின் தனது தங்கையை தமிழில் நடிக்க வைக்க பல முயற்சிகள் செய்தார். ஆனால் யாருமேசீண்டவில்லை. இதனால், தெலுங்கில் முயற்சி செய்து வருகிறார்.

சிம்ரன செய்தி 2: தமிழில் ஜோதிகாவின் போட்டியால் ஓரம்கட்டப்பட்டு தெலுங்கு பக்கம் போன சிம்ரனுக்கு அங்குபடையப்பா செளந்தர்யாவால் கடும் போட்டி.

சிம்ரன் செய்தி 3: சிம்ரனின் கோபம் பற்றி கோடம்பாக்கத்தில் எல்லோருக்குமே தெரியும். பயங்கர கோபக்காரர்சிம்ரன். ஒரு முறை தன்னுடைய ஹேர்டிஸ்ஸர் கம், மேக்கப்மேன் உடன் நடித்த இஷா கோபிகருக்கு ஹேர்டிரஸ்பண்ணி விட்டார்.

இந்த தகவல் சிம்ரன் காதிற்குப்போக சூடாகிப் போனார். மேக்கப் மேன் திரும்பி வந்தவுடன் தன் கையில்அகப்பட்டதை எல்லாம், தூக்கி எறிந்தார். விழுந்த அடியில் சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து நழுவிக்கொண்டார். - இது பழைய செய்தி.

லேட்டஸ்ட்டாக சிம்ரனின் கோபம் பற்றி கோடம்பாக்கம் கலகலத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நட்சத்திரஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிம்ரன், தன் நடனக்கார காதலன் மீது தீடீரென்று கோபமாகி விட்டாராம்.

கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஹோட்டல் அறையில் விசிறி அடிக்க டி.வி , கண்ணாடிகள் உட்பட பலவிலை உயர்ந்த பொருட்கள் தூள் தூளாயின. அத்தனைக்கும் அபராதத் தொகையாக லட்ச ரூபாய்க்கு மேல்கட்டிவிட்டு வந்தாராம் சிம்ரன்.

படங்களில் பூவாய் சிரிக்கும் சிம்ரன் ஏன் இப்போதெல்லாம் அடிக்கடி கோபப்படுகிறார். உங்களுக்கு ஏதாவதுதெரியுமா?

Read more about: actress, cinema, film, news, simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil