»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தன்னை விட குறைந்த வயதான இளைஞனை ஹீரோயின் காதலிப்பது போன்ற படங்கள் நமக்குப் புதிதல்ல.

இந்தியில் டிம்பிள் கபாடியா அதைச் செய்தார். மலையாளத்தில் பாரதி செய்தார். சமீபத்தில் மனிஷா கொய்ராலாமீண்டும் இந்தியில் அப்படி நடித்து பரபரபபை ஏற்படுத்தினார்.

இப்போது இது போன்ற ஒரு ரோலில் நடிக்க இருப்பது நம்ம சிம்ரன். அவரைக் காதலிக்கும் இளைஞனாக நடிக்கப்போவது துள்ளுவதோ இளமை புகழ் தனுஷ். படத்தை இயக்கப் போவது தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா.

தன் மகனை வைத்தே ஏ படமான துள்ளுவதோ இளமையை எடுத்து கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வரை லாபம்பார்த்தார் கஸ்தூரி ராஜா. அதன் தெலுங்கு உரிமை மூலமும் மேலும் சில கோடிகள் கிடைத்தன.

இதனால் இனி நல்ல படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார் போலத் தெரிகிறது. அடுத்ததாகவும் ஒருஅதிரடி படத்துக்கு தயாராகிவிட்டார். சிம்ரன்- தனுஷ் ஜோடியை வைத்துப் படமெடுக்க உள்ளார்.

படத்தின் பெயர் தீண்ட தீண்ட (தலைப்பிலேயே அர்த்தம் புரிகிறதா?). ஒரு நடுத்தர வயது ஆண்டி, இளம் வயதுபையனுடன் காதல் கொள்வது தான் கதையாம்.

உண்மையில் தன்னை விட வயதில் மூத்த கமல்ஹாசனுடன் நட்புடன் சுற்றி வரும் சிம்ரனுக்கு திரையில் சின்னப்பையனை காதலிக்கும் வேடம்.

செய்ங்கப்பா.. என்னவோ செய்ங்கப்பா...

Please Wait while comments are loading...