»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சேது புகழ் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 3-வது படமான பிதாமகனில் சிம்ரன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடப்போகிறார்.

கல்யாணத்துக்குத் தயாராகி வரும் சிம்ரன் முடிந்தவரை பணம் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கில் ஒரு பாட்டுக்குஆட 3 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்ட சிம்ரன் இப்போது தமிழில் பிரசாந்தின் படத்தில் கெஸ்ட் ரோலில்நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

நந்தா சூர்யாவையும், சீயான் விக்ரமையும் இணைத்து பாலா எடுத்து வரும் பிதாமகன் படத்தில் சிம்ரனின் ஒரு டான்சுும்இடம்பெற உள்ளதாம். இதற்காக அசத்தலான பாடலும் ரெடியாகி விட்டதாம். ஆனால், டான்ஸ் லொகேஷன் இன்னும்முடிவாகவில்லை.

பிரசாந்த் படத்தில் கெஸ்ட் ரோல்:

இந் நிலையில் சிவசக்தி மூவி மேக்கர்ஸ், தயாரிப்பில் உருவாகவுள்ள நாகா படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க புக்செய்யப்பட்டுள்ளார்.

வான்மதி, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், வெற்றிக்கொடி கட்டு என பல வெற்றிப்படங்களை அளித்த சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம் இது.

இவர்களது தயாரிப்பில் பிரசாந்த் நடித்து கண்ணெதிரே தோன்றினாள் சூப்பர் டூப்பர்ஹிட் ஆனது.

பிரசாந்த்திற்கு இதில் ஜோடி புதுமுகமாம். ஆனால் பிரசாந்த்தின் ராசியான ஜோடியான சிம்ரனையும், படத்தில் முக்கிய கேரக்டரில்நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

ஒரு பாட்டோ, கெஸ்ட் ரோலோ எதற்கும் வளைந்து கொடுக்க சிம்ரன் ரெடி தான். ஆனால், அதற்கு அவர் வாங்கும் சம்பளம்அதிகமில்லை ஜென்டில்மேன், ரூ. 20 லட்சம் தான். சமீபத்தில் கன்னடப் படத்தின் அட்வான்ஸை சிம்ரன் திருப்பித் தந்ததற்குக்காரணம் அங்கு அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் மிக மிகக் குறைவாக இருந்தது தானாம்.

கன்னடத்தில் ரூ. 50 லட்சத்தில் படத்தையே எடுத்து முடித்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முகம் தெரியாத ஹீரோ, முகம்தெரியாத ஹீரோயின் தான் கன்னட சினிமாவின் ஸ்பெஷாலிட்டியே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil