»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

என்னை சிம்ரனிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்றினார் என அவரது பழைய காதலர் பசவராஜூ என்ற ராஜூசுந்தரம் கூறியுள்ளார். இதற்கும் சிம்ரன் கடுமையான பதிலடி தந்துள்ளார்.

ராஜூ சுந்தரத்தைக் காப்பாற்றிய அதே கடவுள் தான் என்னையும் அவரிடம் இருந்து காப்பாற்றினார் என சிம்ரன்கூறினார்.

சமீபத்தில் வார இதழுக்கு ராஜூ சுந்தரம் அளித்த பேட்டியில், சிம்ரன் தான் என்னைக் காதலித்தார். பின்னர்அவராகவே தான் பிரிந்து போனார். இதனால் நான் உடைந்து போனது உண்மை. ஆனால், என்னை என் தாயார்தான் தேற்றினார். இப்போது மைசூரைச் சேர்ந்த என் மனைவி நிஷ்சிதாவுடன் நான் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

இதற்காக இறைவனுக்கு நன்றி. சிம்ரன் போன்ற ஒரு பெண்ணிடம் இருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளுக்குமிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

இதற்கு சிம்ரன் அதே போல பதில் தந்துள்ளார். ராஜூவின் பேட்டு குறித்து சிம்ரனிடம் கேட்டபோது அவர்கூறியதாவது:

என்னிடம் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி கூறியிருக்கிறார். உண்மையில் நான் தான் கடவுளுக்கு நன்றிசொல்ல வேண்டும். ராஜூ போன்ற ஒரு ஆசாமியிடம் இருந்து என்னைக் கடவுள் காத்துவிட்டார். அவருக்கு அருள்புரிந்த அதே கடவுள் தான் என்னையும் காப்பாற்றினார்.

வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்த பிறகும் எதற்காக பழைய விஷயங்களைக் கிளற வேணடும். என்னுடன்ஏன் வம்புக்கு வர வேண்டும் என்று தெரியவில்லை. முடிந்துபோன பிரச்சனையை தேவையில்லாமல் இழுப்பதுஅசிங்கமான செயல்.

இனியாவது ராஜூ வாயை மூடிக் கொள்வது நல்லது. வேறு வேலை ஏதாவது இருந்தால் அதைப் பார்க்க ராஜூமுயலலாம் என்றார் சிம்ரன் உச்சகட்ட கோபத்தில்.

தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருந்த சிம்ரன் திடீரென ராஜூவுடன் காதலில் விழுந்தது எல்லோரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந் நிலையில் திடீரென கமல்ஹாசனுடன் சுற்ற ஆரம்பித்தார் சிம்ரன். ராஜூவைவெட்டி விட்டார்.

சிம்ரனுடனான நட்பினால் இப்போது கமல் வீடே இரண்டாகிவிட்டது இன்னொரு கதை.

சமீபத்தில் தங்களது சொந்த ஊரான மைசூரில் உள்ள தம்பி பிரபுதேவாவுக்குச் சொந்தமான சாமுண்டீஸ்வரிதிருமண மண்டபத்தில் ராஜூவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிஷ்சிதாவுக்கும் திருமணம் முடிந்தது.

சென்னையில் நடந்த இந்தத் திருமண வரவேற்பில் கமலும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது தான ஹை-லைட்.ராஜூவுக்கு டென்சன் தரவே கமலை அவரது விருப்பத்தையும் மீறி சிம்ரன் கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்ததாகவும் அப்போது கூறப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil