»   »  அப்படி இருந்து இப்படி மாறிய சிந்து

அப்படி இருந்து இப்படி மாறிய சிந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுள்ளானில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிந்து துலானி படம் தொடங்கியபோது ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என்று கண்டிசன் போட்டார்.

ஆனால், படம் வளர வளர தனது கவர்ச்சியை கந்துவட்டிக்கு விட்டது மாதிரி விட்டு விளையாட ஆரம்பித்துவிட்டாராம். இதற்கு முக்கிய காரணம் சங்கவி தான் என்கிறார்கள்.

ஆரம்பத்தில், மும்பை மாடலிங் உலகத்தில் இருந்து நேரடியாகக் கூட்டி வந்தோம் என்று இயக்குனர் ரமணாவும் சிந்துவும் கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவர் உண்மையிலேயே தெலுங்கில் அதிதி என்ற படத்தில் வேறு பெயரில் அறிமுகமாகி ப்ளாப் ஆனவர் என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவரத்தை கோடம்பாக்கம் குருவிகள் வெளியில் கொண்டு வந்தார்கள்.

அந்தத் தெலுங்குப் படம் வந்த வேகத்திலேயே பெட்டிப் பாம்பாய் சுருண்டு படுத்துவிட்டது. அதில் தழுக் மொழுக் கவர்ச்சியும் காட்டிய சிந்து, தமிழில் மட்டும் ஹோம்லியாகத் தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டார்.

தமிழில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி காட்டினால் அத்தோடு கோவிந்தா தான் என்பதால், அந்த பாவ்லா காட்டினார் சிந்து. ஆனால், அது நெடு நாள் நீடிக்கவில்லை.

தனுசுக்கு ஜோடி என்றால் அப்படி, இப்படி நடிக்கத் தான் வேண்டும் என்று இயக்குனர்

ரமணா எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் சங்கவியை படத்தில் புதிதாகச் சேர்த்து ஆட விட்டார்கள்.

மேலும் அவருக்கு சில கிக் காட்சிகளையும் வைக்கப் போவதாக சொன்னார்களாம். இதையடுத்து அதெல்லாம் வேண்டாம் நானே ரெடி.. நீங்க ரெடியா என்று கேட்டபடி களத்தில் இறங்கினாராம் சிந்து.

படம் புராவும் எள் என்றால் ரிபைண்ட் ஆயிலாகவே சிந்து மாறிக் காட்டியிருக்கிறார்.

ரமணாவும் தனுசுமே ஆச்சரியப்படும் அளவுக்கு சிந்துவின் ஒத்துழைப்பு கிராப் உச்சத்தை நோக்கி பாய்ந்ததாம். படம் முடியும் தருவாயில் சிந்துவின் கவர்ச்சிக் காட்சிகளை கொஞ்சம் வெட்டிவிட்டுத் தான் சென்சாருக்கே அனுப்பினார்களாம்.

இப்போதைக்கு தயாரிப்பாளர்கள் போட்டுள்ள தடையால் சுள்ளான் வெளிவருவதில் தாமம்த ஏற்பட்டிருந்தாலும், படம் வெளியான பின் தனக்கு நிச்சயம் ஒரு மார்க்கெட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சிந்து.

பி.கு:

இந்தப் படத்தின் ஹீரோ தனுஷ் பற்றி நாம் பேசவே இல்லையே. சமீப காலமாய் அவருக்கும் சூப்பர் ஸ்டார் குடும்பத்தின் மூத்த மகளுக்கும் காதல் என்று நிறையவே பேசுகிறார்கள் கோடம்பாக்கத்தில். அது உண்மையா என்பதை இரு தரப்பும் உறுதிப்படுத்த மறுக்கின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil