»   »  சிம்புவுக்கு சிந்து நோ

சிம்புவுக்கு சிந்து நோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, குமரியான பின் மாடலிங்கில் நுழைந்து சாம்சங்,பெடரல் பேங்க் விளம்பரங்கள் மூலம் தெலுங்கு சினிமா வழியாக தமிழுக்கு வந்த மும்பை புயல்சிந்து துலானி படு பிஸியாகிக் கொண்டிருக்கிறார்.

தனுசுக்கு ஜோடியாக இவர் நடித்த சுள்ளான் சுருண்டுவிட்டாலும், அடுத்த சிம்ரன் நீதான் என்றுசொல்லி இந்த சுள்ளியை, குளிப்பாட்டி கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கம் ஆசாமிகளும்தெலுங்குவாலாக்களும்.

அதிதி என்ற தெலுங்குப் படம் மூலம் திரையுலகின் புதிய தாரகையாக அறிமுகமாகிய சிந்து துலானி,அங்கிருந்து இளமை கலாட்டாவாக சுள்ளானில் தமிழுக்கு அறிமுகமகமானார்.

முதல் படமான தெலுங்கில் அடக்க ஒடுக்கமாக நடித்த சிந்து, சுள்ளானில் காட்டிய தாராளத்தைப்பார்த்து, அவரா இவரு என்று ஆச்சரியப்பட்டு நிற்கிறது தெலுஙகு திரையுலகம்.

ஆச்சரியத்தோடு நின்றுவிடாத தெலுங்கு புரோடியூசர்கள், சென்னைக்கு வந்து சிந்துவுடன்கொஞ்சம் கடலை போட்டுவிட்டு, கையில் அட்வான்ஸையும் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

சுள்ளான் அனுபவம் மிகவும் இனிமையாக இருந்ததாகவும், முதல் படத்திலேயே இளைஞர்களின்இதயங்களை கொள்ளையடித்தது ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார் சிந்து.

அப்பா பேங்க் ஆபிசர், அம்மா ரயில்வே ஊழியர். நான் படிச்சது பி.ஏ. சோஷியாலஜி. எனக்குப்பிடிச்சது குஷ்பு. ரோல் மாடல் ஐஸ்வர்யா ராய் என தன்னைப் பற்றி சின்னதாய் ஒரு புரோபைலும்கொடுத்தார்.

இப்போதைக்கு தமிழில் வணக்கம் என்ற வார்த்தை மட்டுமே பேசத் தெரிந்த சிந்து துலானிக்குதமிழிலும் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆனால் அதில் 3 படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கும் சிந்து, சிலம்பரசனோடு ஜோடி சேரகிடைத்த வாய்ப்பை உதறிவிட்டாராம்.

சிம்புவின் சேட்டைகள் குறித்து அரசல் புரசலாக அறிந்ததால் அந்தப் பட வாய்ப்புக்கு நோசொல்லிவிட்டார் சிந்து என்கிறார்கள். ஆனால், சிம்புவின் தரப்பிலோ தனுஷை சந்தேகக் கண்ணோடுபார்க்கிறார்களாம்.

நம் படத்தில் நடிக்க வேண்டாம் என சிந்துவுக்கு தனுஷ் ஏதும் தடை போட்டிருப்பாரோ என சிம்புதரப்புக்கு சந்தேகமாம். நற நறத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil