»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தோல்விக்குப் பின் தனுஷ் மிக ஜாக்கிரதையுடனும் எதிர்பார்ப்புடனும் நடித்து வரும் படம்சுள்ளான். விஜய்க்கு பெரும் பிரேக் கொடுத்த திருமலை படத்தை இயக்கிய ரமணா டைரக்ட் செய்யும் இந்தப் படத்தில்மும்பையைச் சேர்ந்த மாடலான சிந்து துலானி ஹீரோயினாக நடிக்கிறார்.

தனுசும் அவரது அண்ணன் செல்வராகவனும் அலசோ, அலசு என்று அலசி நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்து கடைசியில்தேர்வு செய்யப்பட்டவர் தான் சிந்து.


நல்ல உயரம், பளீர் நிறம். கலக்கல் முகம் என அம்சமாகவே இருக்கிறார் சிந்து. அத்தோடு தனுஷ் படத்துக்கு மிக அவசியமானவிஷயங்களும் இவரிடம் தாராளமாகவே உள்ளது. அவற்றை எக்ஸ்போஸ் செய்யும் தாராளமும் கொண்டவராய் இருக்கிறார்.

இந்த விஷயத்தில் எள் என்றால் எண்ணெய்யாக சிந்து நிற்பதால் பிரச்சனையின்றி போய்க் கொண்டிருக்கிறது சுள்ளான் படசூட்டிங்.

இதில் மிக அதிகமாக பேசும் வாலிபராக நடித்து வருகிறாம் தனுஷ். எதையாவது பேசப் போய் வம்பில் மாட்டிக் கொள்ளும்படமாம். லாரி டிரைவரின் மகனாக, சேரிப் பகுதி வாலிபராக நடிக்கிறார் தனுஷ். இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணவிதிகளின்படி மிக வசதியான வீட்டுப் பெண்ணான சிந்து இவரைக் காதலிக்கிறாராம்.

இந்தப் படத்திலு மன்மத ராசா மாதிரி ஒரு பாடலை வைக்கப் போகிறார்களாம்.

சுள்ளானை முடித்துவிட்டு பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக் காலம், தேவதையைக் கணடேன், ஓடிப் போலாமா ஆகியபடங்களையும் இந்த ஆண்டில் முடித்து வெளியிட இருக்கிறார் தனுஷ்.

மகேந்திராவின் படத்தில் தனுசுக்கு ஜோடி பிரியாமணி. மற்ற படங்களில் சான்ஸ் பிடிக்க தனுசுடன் முன்பே நடித்த சோனியா,அபர்ணா மற்றும் காயத்ரி ரகுராம் இடையே கடும் போட்டியாம். தன்னை ஜோடியாக்குவார்கள் என்று நம்பி காயத்ரியும் தனுஷ்உடல் வாகுக்கு ஏற்றார் போல, உடம்பை வற்ற வைத்துக் கொண்டு தயாராகக் காத்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil